Team India Victory Parade Highlights: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
Team India Victory Parade LIVE Updates: இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பான தகவல்களை நேரலையாக பார்ப்போம்:
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை வழங்கியது பிசிசிஐ.
கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் டோல் இசைக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடனமாடினர்.
வெற்றி பேரணி மேற்கொண்டு வரும் வீரர்களுக்கு ஆதரவளித்த மும்பை ரசிகர்களுக்கு விராட் கோலி நன்றி தெரிவிக்கும் காட்சி.
வாங்கடே மைதானத்திற்கு செல்லும் வழியில் அலைகடலென திரண்டிருக்கும் ரசிகர்கள் வெள்ளத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மிதந்து செல்கின்றனர்.
ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவும் கிங் விராட் கோலியுடம் உலகக் கோப்பையுடன் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
இந்திய அணி வீரர் விராட் கோலி தேசியக்கொடியை உற்சாகத்துடன் காட்டியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை வெற்றி பேரணியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
உலகக் கோப்பையை இந்திய அணி வீரர் விராட் கோலி உற்சாகத்துடன் உயர்த்தி காட்டுகிறார்.
மரத்தில் தொங்கியபடியே இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர் ஒருவர் வரவேற்றுள்ளார்.
வான்கடே நோக்கி செல்லும் இந்த டி20 உலகக் கோப்பை பேரணியில் எங்கு பார்த்தாலும் தேசியக் கொடி பறப்பதை காண முடிகிறது. அதோடு ரசிகர்கள் இந்தியா, இந்தியா என்று உற்சாகத்துடன் முழங்கி வருகின்றனர்.
உலகக் கோப்பை பேரணியின் இந்திய தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு இடையில் டி20 உலகக் கோப்பை வெற்றி பேரணி தொடங்கியது.
இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பையுடன் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
மும்பை வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பையை சுத்தம் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
வான்கடே நோக்கி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பேரணி செல்லும் நிலையில் அந்த சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அதற்கு ரசிகர்கள் வழிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்திய வீரர்கள் இன்று காலை டெல்லி வந்த போது அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது தண்ணீரை விமானத்தில் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளித்துள்ளனர்.
வான்கடே மைதானம் நோக்கி இந்திய கிரிக்கெட் வீரர்கள் திறந்த பேருந்தில் பேரணி செல்கின்றனர். இவர்களுடன் கனமழையிலும் ரசிகர்கள் உற்சாகத்துடன் நடந்து செல்ல காத்திருக்கின்றனர்.
வான்கடே நோக்கி இந்திய அணி வீரர்கள் திறந்த பஸ்ஸில் செல்கின்றனர். இதனிடையே அங்கே கூடி இருக்கும் ரசிகர்கள் கோலி, கோலி என்று உற்சாகமாக முழக்கம் இட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் மழையால், இன்று மாலை 5 மணியளவில் திட்டமிடப்பட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் பேரணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது...
வான்கடே மைதானம் முழுவதும் கூடியுள்ள ரசிகர்கள் கொட்டும் மழையிலும் ரோஹித்.. ரோஹித் என்று உற்சாகமாக முழக்கம் இட்டு வருகின்றனர்.
இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது மழை பெய்து வருகிறது.
Background
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் கடந்த 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு ஐசிசி டி20 உலகக் கோப்பையிம் சாம்பியன் பட்டத்தை வென்றது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்திய அணியின் இந்த வெற்றியை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடியது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்திய அணியை வாழ்த்தினார்கள். இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படேஸில் இருந்து இந்திய அணி இன்று (ஜூலை 4) நாடு திரும்பியது.
பிரதமருடன் சந்திப்பு:
அதன்படி, டெல்லி வந்தடைந்தனர் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியினர். பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பாரட்டு விழா:
இதனை தொடர்ந்து மாலை 4 மணிக்கு இந்திய அணி வீரர்களை திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. பின்னர் ஸ்டேடியத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ள வான்கடே மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் இலவசமாக அணுமதிக்கப்பட உள்ளனர். இந்திய அணி வீரர்களை வரவேற்க மும்பையில் ரசிகர்கள் திரண்டுள்ளனர். 2007-ம் ஆண்டு டோனி தலைமையிலான இந்திய அணி முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இதே போல் வெற்றி பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -