T20 Worldcup 2026 : ஆக்சனுக்கு ரெடியா பாய்ஸ்.. இன்று தொடங்குகிறது ஐசிசி டி20 உலகக்கோப்பை.. இந்தியா vs அமெரிக்கா மோதல்
T20 Worldcup 2026 : மொத்தம் 20 அணிகள் பங்குப்பெறும் இந்த தொடரானது இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ளது தொடக்க நாளான இன்று மூன்று முக்கியப் போட்டிகள் நடைப்பெறுகின்றன

50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளை போலவே கிரிக்கெட்டின் வேகமான ஃபார்மட் என அழைக்கப்படும் டி20யில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைப்பெறும், அப்படி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் உலகக்கோப்பை தொடரானது இன்று தொடங்க உள்ளது.
டி20 உலகக்கோப்பை
10-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (பிப்ரவரி 7, 2026) இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாகத் தொடங்குகிறது. மொத்தம் 20 அணிகள் பங்குப்பெறும் இந்த தொடரானது இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இன்றைய போட்டிகள்:
தொடக்க நாளான இன்று மூன்று முக்கியப் போட்டிகள் நடைப்பெறுகின்றன
பாகிஸ்தான் vs நெதர்லாந்து (காலை 11:00 மணி):
இலங்கையின் கொழும்பு (SSC மைதானம்) நகரில் நடைபெறும் இந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது பயணத்தைத் தொடங்குகிறது.
பாக் அணி: அணி: ஃபகார் ஜமான், சைம் அயூப், பாபர் அசாம், சல்மான் அகா(கேப்டன்), கவாஜா நஃபே(கீப்பர்), ஷதாப் கான், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது, சாஹிப்சாதா ஃபர்ஹான், உஸ்மான் கான், உஸ்மான் மிர்சா, உஸ்மான் மிர்சா
நெதர்லாந்து அணி: மைக்கேல் லெவிட், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், சாக் லயன் கேஷெட், கொலின் அக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ்(டபிள்யூ/சி), நோவா குரோஸ், ரோலோஃப் வான் டெர் மெர்வே, லோகன் வான் பீக், ஆர்யன் தட், கைல் க்ளீன், பால் வான் மீக்கெர்ன், ஜுடேன் க்டேன், க்டேன் க்யூன் க்டேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் பிரெட் கிளாசென்
வெஸ்ட் இண்டீஸ் vs ஸ்காட்லாந்து (பிற்பகல் 3:00 மணி):
இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து அணியுடன் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதவுள்ளது.
இந்தியா vs அமெரிக்கா (USA) (இரவு 7:00 மணி):
இன்றைய முக்கிய போட்டியாக, நடப்பு சாம்பியன் இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
இந்திய அணியின் பலம்:
சூர்யக்குமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணி, சொந்த மண்ணில் உலகக்கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் உள்ளது. ரோகித், விராட் போன்ற சீனியர்கள் இல்லாத நிலையில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா போன்ற இளம் வீரர்களின் அதிரடியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஆர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல், ஹர்தின் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு வலுச்சேர்க்கின்றனர்.
அமெரிக்கா அணியை குறைத்து மதிப்பிட முடியாது நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 207 என்கிற இலக்கை கடைசி வரை போராடி தோல்வி அடைந்தது
எதில் பார்க்கலாம்?
இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், டிஜிட்டல் தளமான ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) செயலியிலும் நேரலையாகக் காணலாம். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வர்ணனை வசதி செய்யப்பட்டுள்ளது.





















