மேலும் அறிய

IND vs USA: இது அமெரிக்கா டீமா? இந்தியா பி டீமா? அம்புட்டும் நம்ம பயலுக!

T20 WC IND vs USA: இந்தியாவிற்கு எதிராக ஆடும் அமெரிக்க அணியில் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர்களே பெரும்பாலும் உள்ளனர்.

2026ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று இலங்கையில் தொடங்கியது. இலங்கை - இந்தியா ஆகிய 2 நாடுகளும் இணைந்து இந்த தொடரை நடத்துகின்றனர். 

அமெரிக்கா:

இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அமெரிக்காவுடன் விளையாடி வருகிறது. மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் முதலில் பந்துவீசுவதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது. 

அமெரிக்க அணியைப் பொறுத்தமட்டில் அவர்களது அணியின் பெயரில் மட்டும்தான் அமெரிக்கா உள்ளது. மற்ற வகையில், அந்த அணியில் ஆடும் வீரர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள். 

அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்தியர்கள்:

மோனங்க் படேல்

மிலிந்த் குமார்

சாய்தேஜா 

சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி

செளரப் நட்ரவால்கர்

சுபம் ரஞ்சனே

ஹர்மீத் சிங்

ஆகியோர் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவர்கள். மோனங்க் படேல் இந்தியாவின் குஜராத்தில் பிறந்தவர். மிலிந்த் குமார் டெல்லியில் பிறந்தவர். செளரப் நட்வால்கர் மும்பையில் பிறந்தவர். சுபம் ரஞ்சனே புனேவில் பிறந்தவர். ஹர்மீத் சிங் மும்பையில் பிறந்தவர். சாய்தேஜா அமெரிக்காவிலே பிறந்தவர். 

திறமையான இந்தியர்கள்:

மோனங்க் படேல், சாய் தேஜா, மிலிந்த் குமார், சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி சிறந்த பேட்டிங் ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்கள். செளரப் நட்வால்கரும் சிறந்த பந்துவீச்சாளராக அந்த அணிக்காக ஆடி வருகிறார்.  மோஷின் மற்றும் அலிகான் இருவரும் பாகிஸ்தானைப் பூர்வீகமாக கொண்டவர்கள். இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட சிலர் இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவமும் கொண்டவர்கள்.

இந்தியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடும் ஆற்றல் கொண்டவர்கள். அடிப்படையில் இந்தியர்களான இவர்களில் பலரும் இந்தியாவில் பிறந்து பின்னரே அமெரிக்காவிற்குச் சென்றனர். 

தடுமாறும் இந்தியா:

இதனால், இவர்கள் இந்திய அணிக்கு நிகரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாகவே உள்ளனர். கடந்த டி20 உலகக்கோப்பையிலும் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியையே வீழ்த்தி வரலாறு படைத்தது. 

இதனால், இந்த டி20 உலகக்கோப்பையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கருதப்படுகிறது. இதன் எதிரொலியாகவே, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான அபிஷேக் சர்மாவை ரன் ஏதும் எடுக்காமலும், இஷன் கிஷனை 20 ரன்னிலும் அவுட்டாக்கினார்கள். 

இந்திய அணி தற்போது 46 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஷிவம் துபே, அபிஷேக் சர்மா இருவருமே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
Ind vs NZ T20 WC 2026 Final: பேய் போல் பேட்டிங் செய்த இந்தியா... பதிலடி தருமா நியூசிலாந்து.., 256 ரன் டார்கெட்
Ind vs NZ T20 WC 2026 Final: பேய் போல் பேட்டிங் செய்த இந்தியா... பதிலடி தருமா நியூசிலாந்து.., 256 ரன் டார்கெட்
IND vs NZ Final: சாதனை நாயகன் அபிஷேக் சர்மா: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய சரித்திரம்
IND vs NZ Final: சாதனை நாயகன் அபிஷேக் சர்மா: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் புதிய சரித்திரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?
Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 WC 2026 Champion: சாம்பியன் இந்தியா! 3வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று வரலாறு! நாடே ஹாப்பி!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
T20 World Cup 2026 Final: மொத்த ரெக்கார்டும் நம்ம் கிட்ட..டி20 கிரிக்கெட்டின் அசைக்க முடியாத ராஜா.. இந்தியா சாதனை மழை!
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
Jananayagan Release: சோதனையில் இருக்கும் விஜய் ரசிகர்கள்.. விரைவில் வரும் குட் நியூஸ்.. என்ன தெரியுமா?
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்
ABP Exclusive: “ நாங்கள் சரணடைய மாட்டோம்.. 8 வருட போருக்கும் தயார்" ஆனால், இந்தியா... எச்சரிக்கும் ஈரான் தலைவர்
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
T20 WC Final IND vs NZ: பந்து போடப்போகும் நியூசிலாந்து! ரன்மழை பொழியுமா இந்தியா? இறுதிப்போட்டி யுத்தம் ஸ்டார்ட்!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
தமிழகத்தில் முதல் தேவாங்கு பாதுகாப்பு மையம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்தை காக்க ஒரு புதிய பாதை!
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
Hyundai Offers: பட்ஜெட் கார்களுக்கு பலே ஆஃபர்.. ஹுண்டாயின் எந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
IND vs NZ WC Final: வருணுக்கு பதிலாக குல்தீப் யாதவா? இறுதிப்போட்டியில் ஏன்? வாங்குன அடி அப்படி?
Embed widget