டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கேப்டன் சூர்யக்குமார் யாதவ் அவர் மீது நம்பிக்கை வைத்து அதே அணியுடன் களமிறங்கியுள்ளது. 

Continues below advertisement

சொதப்பி வரும் வருண் சக்கரவர்த்தி: 

இந்திய அணியின் முதுகெலும்பாக பல போட்டிகளில் ஜொலித்தது சுழற்பந்து தான், குறிப்பாக இந்திய அணி நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ரன்களை வாரி வழங்கி வருகிறார்.

வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். முதல் 4 போட்டிகளிலே 9 விக்கெட்டுகளை அவர்  கைப்பற்றினார். ஆனால், அடுத்த 4 போட்டிகளில் 16 ஓவர்கள் வீசி 179 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். 4 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு அவரது ஃபார்ம் சுமாராகவே அமைந்துள்ளது. 

Continues below advertisement

இதனால், வருண் சக்கரவர்த்திக்குப் பதிலாக இந்த போட்டியில் குல்தீப் யாதவ் இடம்பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. 

அணியில் மாற்றமில்லை: 

ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இன்றி களமிறங்கும் என்று கேப்டன் சூர்யக்குமார் யாதவ் தெரிவித்தார், இதன் மூலம் வருணின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார். தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை வருண் சக்கரவர்த்தி பயன்ப்படுத்தி கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

அணி விவரம்:

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், அபிஷேக் சர்மா, சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

நியூசிலாந்து அணி: சான்ட்னர்  டிம் செய்ஃபெர்ட், ஃபின் ஆலன், ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், சாப்மன், மிட்செல், நீஷம், மேட் ஹென்றி, பெர்குசன், ஜேக்கப் டஃபி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.