T20 World Cup 2026: வீட்டுக்கு கிளம்பிய ஆண்ட பரம்பரை ஆஸி... கெத்தாக சூப்பர் 8-ல் நுழைந்த ஜிம்பாப்வே
2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் நிலையிலேயே ஆஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. முன்னதாக, 2009 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறியது

டி20 உலகக்கோப்பை தொடரில் முதல் முறையாக லீக் சுற்றிலேயே வெளியேறி ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி அளித்துள்ளது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து ஜிம்பாப்வே அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெற்றது.
டி20 உலகக்கோப்பை:
உலகில் உள்ள 20 அணிகள் பங்குப்பெறும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. 4 குரூப்களில் டாப் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிப்பெறும். ஏற்கெனவே இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகள் தகுதிப்பெற்றுள்ளது.
சூப்பர் 8-ல் ஜிம்பாவ்வே அணி:
இன்று அயர்லாந்து-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையெயான இலங்கையின் பல்லேகலேவில் விளையாடவிருந்தன, ஆனால் கனமழை காரணமாக போட்டியானது ரத்துசெய்யப்பட்டது. இதனால் ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. மேலும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
வரலாறு படைத்த ஜிம்பாப்வே
டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே சூப்பர் 8 கட்டத்தை எட்டுவது இதுவே முதல் முறை. 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வடிவம் மாற்றப்பட்டதிலிருந்து, ஜிம்பாப்வே குரூப் ஸ்டேஜை கடந்து செல்வது இதுவே முதல் முறை. இருப்பினும், டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே குழு கட்டத்தைத் தாண்டி முன்னேறுவது இது இரண்டாவது முறை மட்டுமே. 2022 ஆம் ஆண்டில் அவர்கள் கடைசி 12 இடங்களை எட்டினர், ஆனால் வடிவமைப்பு மாற்றத்திற்குப் பிறகு இது அவர்களின் முதல் சூப்பர் 8 ஆகும்.
2வது முறையாக குரூப் சுற்றில் வெளியேறிய ஆஸி:
இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. ஜிம்பாப்வே தனது இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிராக அயர்லாந்து எப்படியாவது வெற்றி பெறும் என்று ஆஸ்திரேலியா நம்பியது , இருப்பினும், இன்றைய போட்டி மழையாக் ரத்தானதாl , ஜிம்பாப்வேயின் மொத்த புள்ளிகள் ஐந்த புள்ளிகளை பெற்றது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியா அதிகபட்சமாக நான்கு புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்க முடியும்.
இதன் விளைவாக, 2026 டி20 உலகக் கோப்பையின் குரூப் நிலையிலேயே ஆஸ்திரேலியா வெளியேற்றப்பட்டது. முன்னதாக, 2009 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா குரூப் சுற்றிலேயே அப்பால் முன்னேறத் தவறியது. இதுவரை, டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8க்கு ஏழு அணிகள் தகுதி பெற்றுள்ளன: இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து.





















