SA vs WI: சொதப்பிய டாப் ஆர்டர்! இந்தியா கனவை காப்பாற்றுமா தென் ஆப்பிரிக்கா.. 177 டார்கெட் வைத்த வெஸ்ட் இண்டீஸ்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ்:
டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதபாத் மைதனத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக பிராண்டன் கிங் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் களமிறங்கினர்.
தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ்:
முதல் ஓவரில் அதிரடியாக தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது, பவர்ப்பிளே முடிவதற்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது, குறிப்பாக ககிசோ ரபாடாவின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்தனர். ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறிய நிலையில் 100 ரன்களை கடக்குமா என்கிற கேள்வி எழுந்தது.
ஹோல்டர்-ஷெஃபர்ட் அதிரடி:
இதன் பின்னர் ஜேசன் ஹோல்டர்-ரோமாரியோ ஷெஃபர்ட் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது, இருவரும் தேவைக்கேற்ப பவுண்டரிகள் அடித்தும் ஸ்டிரைக் ரொட்டேட் செய்து ஸ்கோர் போர்ட்டை முன்னோக்கி கொண்டு சென்றனர். இதனால் அதளபாதளத்தில் இருந்த மேற்க்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் 150 ரன்களை கடந்தது. இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை குவித்தது. அதிகப்பட்சமாக ரோமாரியோ ஷெஃபர்ட் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 48 ரன்களும் எடுத்தனர்.
WI after 13 overs: 97/7
— Keshav Roy (@KeshavRoy7101) February 26, 2026
WI after 20 overs: 176/8
REMARKABLE COMEBACK BY WEST INDIES 🔥
A partnership to remember with Holder & Shepherd in an important match in the T20 World Cup. #WIvsSA pic.twitter.com/ZIM22PEgtO
தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளும், கார்பின் பாஷ் மற்றும் கசிசோ ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மேலும் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 8 விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனையையும் படைத்தது ரோமாரியோ ஷெஃபர்ட்-ஜேசன் ஹோல்டர் ஜோடி.





















