மேலும் அறிய

T20 World Cup Super 8: லாக் ஆன லிஸ்ட் - சூப்பர் 8 சுற்றில் யார்? யாருடன், எப்போது மோதல்? இந்திய அணிக்கான போட்டிகள்

ICC T20 World Cup Super 8: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 8 சுற்றில், இந்திய அணி எங்கு? எப்போது? எந்தெந்த அணிகளுடன்? மோத உள்ளது தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ICC T20 World Cup Super 8: ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றுக்கு, கடைசி அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி டி20 உலகக் கோப்பை:

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக் கோப்பையின், லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அது முடிவடைதற்கு முன்பாகவே அடுத்தகட்டமான சூப்பர் 8 சுற்றுக்கான 8 அணிகளும் இறுதியாகியுள்ளது. நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் கடைசி அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் சூப்பர் 8 சுற்று எப்போது தொடங்கும்? எந்தெந்த அணிகள் எந்த பிரிவில் இடம்பெற்றுள்ளன? இந்திய அணி யாரை, எப்போது எதிர்கொள்ளும்? சென்னையில் இந்தியா யாருடன் மோதுகிறது? என்பது தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற நிலையில், ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என 4 குழுக்களாக பிரிக்கப்பட்டன. தொடர்ந்து லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த 8 அணிகள் சூப்பர் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

க்ரூப் 1 க்ரூப் 2
இந்தியா (க்ரூப் - A) இங்கிலாந்து (க்ரூப் - C)
மேற்கிந்திய தீவுகள் (க்ரூப் - C) நியூசிலாந்து (க்ரூப் - D)
தென்னாப்ரிக்கா (க்ரூப் - D) இலங்கை (க்ரூப் - B)
ஜிம்பாப்வே (க்ரூப் - B) பாகிஸ்தான் (க்ரூப் - A)

இந்திய அணிக்கான போட்டிகள் எங்கு? எப்போது?

க்ரூப்-1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி வலுவான மேற்கிந்திய தீவுகள், தென்னாப்ரிகா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் சூப்பர் 8 சுற்றில் மோத உள்ளது. அதன் முடிவில் இரண்டு பிரிவிலும் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி,

  • நியூசிலாந்து Vs பாகிஸ்தான் - பிரேமதாசா மைதானம், பிப்ரவரி 21, கொழும்பு
  • இலங்கை Vs இங்கிலாந்து - கண்டி மைதானம், பிப்ரவரி 22, இலங்கை
  • இந்தியா Vs தென்னாப்ரிக்கா - நரேந்திர மோடி மைதானம், பிப்ரவரி 22, அகமதாபாத்
  • ஜிம்பாப்வே Vs மேற்கிந்திய தீவுகள் - வான்கடே மைதானம்,பிப்ரவரி 23, மும்பை
  • இங்கிலாந்து Vs பாகிஸ்தான் - கண்டி மைதானம் பிப்ரவரி 24, இலங்கை
  • இலங்கை Vs நியூசிலாந்து, பிரேமதாசா மைதானம், பிப்ரவரி 25, கொழும்பு
  • தென்னாப்ரிக்கா Vs மேற்கிந்திய தீவுகள் - நரேந்திர மோடி மைதானம்,பிப்ரவரி 26, அகமதாபாத்
  • இந்தியா Vs ஜிம்பாப்வே - எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை, பிப்ரவரி 26
  • இங்கிலாந்து Vs நியூசிலாந்து - பிரேமதாசா மைதானம், பிப்ரவரி 27, கொழும்பு
  • இலங்கை Vs பாகிஸ்தான் - கண்டி மைதானம், பிப்ரவரி 28
  • ஜிம்பாப்வே Vs தென்னாப்ரிக்கா - அருண் ஜெட்லி மைதானம், மார்ச் 1, டெல்லி
  • இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் - ஈடர்ன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மார்ச் 1

வரும் 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக  இந்தியா களமிறங்க உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. புக்மைஷோ என்ற ஆன்லைனில் தளம் வாயிலாக மட்டுமே இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவிற்கு நேரும் சோகம்?

ஒருவேளை சூப்பர் 8 சுற்றின் முடிவில் நியூசிலாந்து அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறினால், 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியால் நேரடியாக தகுதி பெற முடியாது. இதற்காக தகுதிச்சுற்று போட்டியில் பங்கேற்க வேண்டி இருக்கும். நீண்ட கால கோரிக்கையை ஏற்று 2028ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுக்கு கடைசி அணியாக தகுதி பெற்றது யார்?

நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், பாகிஸ்தான் கடைசி அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெற்றுள்ளன?

இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, தென்னாப்ரிக்கா, இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் யாரை எதிர்கொள்கிறது?

இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளுடன் சூப்பர் 8 சுற்றில் மோத உள்ளது.

இந்திய அணி சென்னையில் எந்த அணியுடன் விளையாடுகிறது?

இந்திய அணி வரும் பிப்ரவரி 26ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக களமிறங்க உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget