இந்திய அணி சாம்பியன்:
கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நேற்று (ஜூன் 29) இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. அந்த வகையில் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி 17 வருடங்களுக்குப்பிறகு வென்று சாதனை படைத்தது. இச்சூழலில் இதில் எவ்வளவு பரிசுத்தொகையை சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணியும் இரண்டாம் இடத்தை பிடித்த தென்னாப்பிரிக்க அணியும் வாங்கும் என்பதை இங்கே பார்ப்போம்;
T20 உலகக் கோப்பை 2024 பரிசுத் தொகையை வென்றவர்கள்:
வெற்றியாளர்கள் | பரிசுத் தொகை (INR) |
|---|---|
இந்தியா (சாம்பியன்) | 21.13 கோடி |
தென்னாப்பிரிக்கா | 12.01 கோடி |
ஆப்கானிஸ்தான் | 07.32 கோடி |
இங்கிலாந்து | 07.06 கோடி |
ஆஸ்திரேலியா | 04.54 கோடி |
மேற்கிந்திய தீவுகள் | 04.54 கோடி |
பங்களாதேஷ் | 03.95 கோடி |
அமெரிக்கா | 03.69 கோடி |