கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருக்கிறது.
இந்த தொடருக்காக பல்வேறு நாடுகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. உலககோப்பைக்கான அணியை சமர்ப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலககோப்பைக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு விருப்பமான உலககோப்பை அணியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், 2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆர்.பி.சிங்கும் தனது விருப்பமான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார். அவரது அணியில், பெங்களூரில் உள்ள என்சிஏவில் தாடை காயத்தில் இருந்து மீண்ட பிறகு உடல் தகுதியுடன் இருப்பதாகக் கூறப்படும் ஹர்ஷல் படேலுக்கு இடமில்லை. மேலும், இந்திய அணியில் சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவுக்கு இடம் அளித்துள்ளார்.
அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான ஆர்பி சிங்கின் இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், தீபக் சாஹர்.
காத்திருப்பு: சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின்.
ஆசிய கோப்பை பின்னடைவுக்கு என்ன காரணம் :
உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முக்கியமான பந்துவீச்சாளரும், இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளருமான பும்ரா காயத்தால் ஆடாததால் ஏற்பட்ட பின்விளைவை ஆசிய கோப்பையில் நன்றாக காண முடிந்தது.
இந்திய அணி பந்துவீச்சில் எந்தளவு பலவீனமாக இருந்தது என்பதை ஆசிய கோப்பையில் பார்க்க முடிந்தது. இதனால், இவர்கள் இருவரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக திரும்ப இருப்பது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.