ஐசிசி டி20 உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெற்றி பெற்று கொண்டாடிக் கொண்டிருக்க, உலக நாடுகள் எல்லாம் ஆஸ்திரேலியாவிற்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டிருக்கின்றன. ஒரு நாடு மட்டும், இந்த வெற்றியை ரசிக்காமல், தூற்றிக் கொண்டிருக்கிறது. அது வேறு எந்த நாடும் இல்லை... நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான். 


ஆஸ்திரேலியாவின் வெற்றியை விட, நியூசிலாந்தின் தோல்வியை விட, வெற்றிக்கு பின் வழங்கப்பட்ட விருது தான் இப்போது பாகிஸ்தானின் பிரதான பிரச்சனை. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கும், ஆஸ்திரேலிய அணி பைனல் வர முக்கிய காரணமாக இருந்த டேவிட் வார்னருக்கு மேன் ஆப் தி சீரிஸ்( தொடர் நாயகன்) விருதை ஐசிசி வழங்கியது. இங்கு தான் இப்போது பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். 


வார்னரை விட அதிக ரன் எடுத்தது பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான பாபர் அஷம் தான், அவருக்கு தான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட வேண்டும் என்பது பாகிஸ்தானின் கோரிக்கை. கோரிக்கை இல்லை... கட்டளை. அப்படி தான் பாகிஸ்தான் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். சரி... ரசிகர்கள் தான் இப்படி என்றால், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் அதே கருத்தை வெளிப்படையாக கூறி வருகிறார்கள். 






பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோஹிப் அக்தார், வார்னருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது, நியாயமற்ற முடிவு என்றும், தங்கள் நாட்டு வீரரான பாபருக்கு தான் அது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். 






 


அக்தரின் இந்த பதிவிற்கு அவரது பதிவுக்கு உள்ளே சென்று, பலர் அவரை கலாய்த்தும் வருகின்றனர். அக்தரின் இந்த கருத்து தற்போது கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.


‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண