முன்னாள் தென்னாப்ரிக்க கிரிக்கெட் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டு ப்ளெசி, டி-10 ஃபார்மெட் கிரிக்கெட்டுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் போன்ற பிரமாண்ட விளையாட்டு தொடரிலும் டி-10 கிரிக்கெட் விளையாடலாம் என தெரிவித்திருக்கிறார். 


நவம்பர் 19-ம் தேதி தொடங்க இருக்கும் அபுதாபி டி-10 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 4 வரை நடைபெற உள்ளது. இந்த டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார் டு ப்ளெசி. இந்நிலையில், டி-10 கிரிக்கெட் குறித்து பேசிய அவர், ‘டெஸ்ட். ஒரு நாள், டி-20 என மூன்று கிரிக்கெட் ஃபார்மெட்களிலும் விளையாடி உள்ள போதும், டி-10 ஃபார்மெட் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள் டி-10 கிரிக்கெட் தொடரில் விளையாட எதிர்ப்பார்த்துள்ளனர். டி-10 கிரிக்கெட் விளையாட்டுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஒலிம்பிக் போன்ற பிரமாண்ட விளையாட்டு தொடரிலும் டி-10 கிரிக்கெட் விளையாடலாம்” என தெரிவித்துள்ளார்.



2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்:


2020 ஒலிம்பிக் தொடரை அடுத்து, 2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் பாரிஸ் நகரிலும், 2028-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாட்டையும் சேர்க்க ஐசிசி முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ளதால், கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைக்கும் முனைப்பில் ஐசிசி முயற்சித்து வருகிறது.






முன்னதாக, 1900-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் விளையாடப்பட்டது. கிட்டத்தட்ட 128 ஆண்டுகளுக்கு பிற்கு மீண்டும் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்கும் பணிகளில் ஐசிசி தீவிரம் காட்டி வருகின்றது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண