சூர்யகுமார் யாதவ் பிறந்த நாள்:


இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்று தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய அணியில் தாமதமாக அறிமுகமாம் ஆனாலும் குறுகிய காலத்தில் தன்னுடையை திறமையை வெளிப்படுத்தியாவர். அந்தவகையில் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் தன்னுடைய 31 வயதில் தான் அறிமுகமானார். சூர்யகுமார் யாதவ் 1990 செப்டம்பர் 14 அன்று மும்பையில் பிறந்தார். ஆனால் இவருடைய பூர்வீகம் உத்தரபிரதேச மாநிலம் காஜிபூர்.


 



  • 2010ல் மும்பை அணிக்காக ஸ்கை முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் அவர் டெல்லிக்கு எதிராக 89 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

  • மும்பை இந்தியன்ஸ் தவிர, இந்தியன் பிரீமியர் லீக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

  • மும்பை இந்தியன்ஸ் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் பட்டத்தை வென்றது. இந்த சீசனில் ஸ்கை அற்புதமாக பேட்டிங் செய்திருந்தார்.

  • 16 போட்டிகளில் 480 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தால் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

     



  • டி20 சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியின் மூலம்அறிமுகமானார்.

  • அறிமுக போட்டியில் 31 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அபாரமான இன்னிங்ஸ் விளையாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
    அவர் இதுவரை விளையாடிய 71 டி20 சர்வதேச போட்டிகளில் 68 இன்னிங்ஸ்களில் 42.66 சராசரி மற்றும் 168.65 ஸ்ட்ரைக் ரேட்டில் 2432 ரன்கள் எடுத்துள்ளார்.

  • 20 அரை சதங்கள் மற்றும் 4 சதங்கள் அடித்துள்ளார். இந்த வடிவத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 117 ரன்கள். தற்போது, ​​இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், சூர்யகுமார் யாதவை ஸ்கை என பெயரிட்டுள்ளார்.


ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவின் புள்ளி விவரம்:


சூர்யகுமார் யாதவ் இதுவரை 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில், அவர் 35 இன்னிங்ஸ்களில் 25.76 சராசரி மற்றும் 105.02 ஸ்ட்ரைக் ரேட்டில் 773 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 4 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்த வடிவத்தில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 72 ஆகும். சூர்யகுமார் யாதவ் இதுவரை 1 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார்.


டி20 உலகக் கோப்பை நாயகன்:


கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் தொடர்ந்து 10 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி உலகப் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. அன்றைய நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுததற்கு முக்கிய காரணமாக அமைந்தது தோல்வியை விட இந்திய வீரர்கள் ஏமாற்றத்துடன் மைதானத்தில் வலம் வந்தது தான். ஆனால், இந்த தோல்விக்கு மருந்தாக அமைந்தது இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றி தான். இதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் சூர்யகுமார் யாதவ்.


அதாவது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை வீசியவர் ஹர்திக் பாண்டியா. கிளாசனுக்கு பிறகு இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் டேவிட் மில்லர்.


இந்நிலையில் தான் அந்த சம்பவம் நடந்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே அவர் பந்தை தூக்கி சிக்ஸ் அடிக்க முயன்றார். பந்து பவுண்டரி எல்லைக்கு அருகே சென்றது.


அப்போது சூர்யகுமார் யாதவ் மின்னல் வேகத்தில் ஓடி வந்து பந்தை பிடித்தார். ஆனால், அவர் வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டி செல்ல வேண்டிய நிர்பந்தத்தில், பந்தை மேலே தூக்கி போட்டு பவுண்டரி எல்லையை தாண்டி சென்றார். பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார். இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த டேவிட் மில்லர் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். சூர்யகுமார் யாதவ் பிடித்த இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கேட்ச் தான் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.