நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்க உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்க போகும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் அதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சமீப காலங்களாக இந்தியாவின் மிகவும் முக்கியமான 3 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்காதது பெரிய சிக்கலாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங்கிற்கு அது பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. அதாவது புஜாரா, விராட் கோலி மற்றும் ரஹானே ஆகிய மூவரின் சதம் இல்லாத இன்னிங்ஸ்கள் இந்தியாவிற்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. 


இந்தநிலையில், 2021 டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்தும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. உண்மையில், கோஹ்லி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து வடிவங்களிலும் மூன்று இலக்க ஸ்கோரை எட்டவில்லை. இருந்த போதிலும், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் மற்றும் பவுண்டரிகள் அடித்த பட்டியலில் விராட் கோலி முன்னிலை வகிக்கிறார்.






கடந்த 5 வருடங்களில் விராட் கோலி, அனைத்து வடிவங்களிலும் 936 பௌண்டரிகளை அடித்துள்ளார், இவருக்கு அடுத்த படியாக ஜோ ரூட் 798 பௌண்டரி அடித்து இரண்டாவது இடத்தில உள்ளார். அதேபோல், டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த ஐந்தாண்டுகளில் எடுத்த ரன்களின் எண்ணிக்கையிலும் கோலி முன்னிலை வகிக்கிறார்.


கடந்த 5 வருடங்களில் அதிக 4 அடித்தவர்கள் பட்டியல் (நவம்பர் 24, 2021)


936 - விராட் கோலி 
798 - ஜோ ரூட் 
788 - பாபர் அசாம் 
770 - ரோஹித் சர்மா 
698 - ஜானி பேரிஸ்டோ 


கடந்த 5 வருடங்களில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியல் (நவம்பர் 24, 2021)


9725 (59.29) - விராட் கோலி 
8069 (50.43) - ஜோ ரூட் 
7770 (51.77) - ரோஹித் சர்மா 
7568 (50.11) - பாபர் அசாம்
5981 (36.69) - ஜானி பேரிஸ்டோ


 


அதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 264 சிக்ஸர்களை 'ஹிட்மேன்' அடித்துள்ளார்.  இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து டி20 கேப்டன் இயான் மோர்கன் 154 சர்வதேச சிக்சர்களுடன் பட்டியலில் இருக்கிறார். 


கடந்த 5 வருடங்களில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியல் (நவம்பர் 24, 2021)


264 - ரோஹித் சர்மா 
154 - இயான் மோர்கன் 
149 - எவின் லீவிஸ் 
145 - ஆரோன் பின்ச்
144 - மார்ட்டின் கப்டில் 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


 


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


 


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


 


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண