Sri Lanka Broke Indian Cricket Team Test Record: ஐபிஎல் 2024 சீசன் தற்போது தாறுமாறாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து கிட்டத்தட்ட உலகிலுள்ள அனைத்து கிரிக்கெட் பிரியர்களும் ஐபிஎல்-ஐ உற்று நோக்கி வருகின்றனர். ஆனால் இதற்கிடையில், இலங்கை அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை படைத்து இந்திய அணியின் உலக சாதனையை தகர்த்தது. இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் ஆட்டம் நிறைவடைந்த நிலையில், மறுநாளே இலங்கை அணி இந்திய அணி உலக சாதனை படைத்தது. 


வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 531 ரன்கள் எடுத்தது. இவ்வளவு பெரிய ஸ்கோர் அடித்தும் இலங்கை அணிக்காக எந்த வீரரும் சதம் அடிக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இதன் மூலம் இந்தியாவின் சாதனையையும் இலங்கை அணி  முறியடித்தனர். இதற்கு முன், டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் இல்லாமல் இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோரை அடித்த சாதனையாக இந்தியா இருந்தது, தற்போது அதை இலங்கை கைப்பற்றியுள்ளது.





 


48 ஆண்டுகளுக்கு முன்பு 1976-ல் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 524 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இன்னிங்சில் இந்தியாவுக்காக யாரும் சதம் அடிக்கவில்லை. தற்போது மொத்தமாக 531 ரன்களை எடுத்து இந்தியாவை இலங்கை அணி முந்தியுள்ளது. இப்போது ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் சதம் இல்லாமல் அதிக ஸ்கோரை அடித்த சாதனை இலங்கையின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இலங்கையில் இருந்து எந்த பேட்ஸ்மேனும் சதம் அடிக்காத போதிலும், அந்த அணியின் 6 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்திருந்தனர்.


இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஸ் 150 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 1 சிகஸர் உதவியுடன் 93 ரன்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸ் 167 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். திமுத் கருணாரத்னே 86 ரன்களும், கேப்டன் தனஞ்சய டி சில்வா 70 ரன்களும் சேர்த்தனர். தினேஷ் சண்டிமால் 59 ரன்களும், நிஷான் மதுஷ்கா 57 ரன்களும் எடுத்திருந்தனர். 


டெஸ்டில் சதம் இல்லாத இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோர் 



  1. வங்கதேசத்துக்கு எதிராக இலங்கை 531 ரன்கள், 2024

  2. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 524 ரன்கள் (இன்னிங்ஸ் டிக்ளேர், 9 விக்கெட்), 1976

  3. 2009 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆஸ்திரேலியா 520 ரன்கள் (இன்னிங்ஸ் டிக்ளேர், 7 விக்கெட்)

  4. 1998 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 517 ரன்கள் எடுத்தது

  5.  1981 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 500 (இன்னிங்ஸ் டிக்ளேர், 8 விக்கெட்)


இலங்கை அணிக்கு எதிராக வங்கதேச அணி தற்போது முதல் இன்னிங்ஸில் 33 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஜாகிர் ஹாசன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி இன்று சிறப்பாக பேட்டிங் செய்து இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கும்.