இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷர்துல் தாகூரின் அசாத்திய பந்து வீச்சால், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எட்டவே தென்னாப்ரிக்க அணி திணறி வருகிறது. ஹோஹனஸ்பெர்க்கில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னாப்ரிக்காவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட் கரியரில் முதல் முறையாக ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.


இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய 202 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ரன்கள் எடுத்தது. அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில், தென்னாப்ரிக்க அணி வீரர்கள் டீன் எல்கரும், கீகன் பெட்டர்சனும் களத்தின் நின்று நிதானமாக ரன் குவித்தனர். விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் திணறி கொண்டிருக்கையில்தான் ஷர்துல் தாகூர் களத்தில் இறங்கினார்.


இன்னும் இரண்டாம் நாள் ஆட்டம் முடியாத நிலையில், தேநீர் இடைவெளியின்போது ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் ஷர்துல் தாகூர். உடனே, ட்விட்டரில் டிரெண்டாகும் ‘லார்ட் ஷர்துலுக்கு’ மீம்ஸ்களாக வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஷர்துலை கொண்டாடும் மீம்ஸ் வாழ்த்துகளில் ஹைலைட்டானவை சில. 






















மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண