Rohit Sharma: டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.  இச்சூழலில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஜிம்மில் பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

ஒருநாள் போட்டியில் கவனம்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரவிருக்கும் தொடரில் ஒரு நாள் போட்டிகளை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அணியை வழிநடத்த உள்ளார். டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில் தீவிரமாக வலைபயிற்சியும் செய்து வருகின்றனர்.

வைரல் வீடியோ:

இச்சூழலில் தான் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் ஜிம்மில் தீவிரமாக பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், “வரவிருக்கும் பணிகளுக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக, ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் பிசிசிஐ சிறப்பு மையத்தில் திறன்கள் மற்றும் வலிமை பயிற்சியில் கவனம் செலுத்தி பயிற்சி பெற்றனர். இரு வீரர்களும் தங்கள் பணிக்காலத்தில் சிஓஇயில் வழங்கப்பட்ட வெவ்வேறு நிலைமைகளை உருவகப்படுத்தினர்என்று கூறியுள்ளது

ரோஹித் சர்மாவின் ஒருநாள் போட்டி சாதனைகள்:

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 250க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில், 31 சதங்கள் மற்றும் 57 அரைசதங்கள் உட்பட 48க்கு மேல் சராசரியாக 11,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் பெற்ற ரோஹித், ஒருநாள் போட்டிகளில் அதிக தனிநபர் ஸ்கோரான 264 ரன்களை குவித்த சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.