இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சார்மாவின் நிகர சொத்து மதிப்பு, சம்பளம், கார் மற்றும் வீடுகள் தொடர்பான விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்:



இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ரோகித் சர்மா. ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். இவர் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது.


கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளிலும், 2013 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வரும் ரோகித் சர்மா தன்னுடைய பேட்டில் பல்வேறு நிறுவனங்களை முன்னிலை படுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைக்கிறது. 


விளம்பரங்களில் ரோகித் சர்மா:


விளையாட்டு வீரர்கள் பல்வேறுவிதமான ஸ்போர்ட்ஸ் நிறுவனங்கள் மூலம் விளம்பரங்களில் நடித்து வருகின்றனர். இதில் இவருக்கு  ரிபோக், சியாட், டான்உள்ளிட்ட பேட் ஸ்பான்சர் ஒப்பந்தங்களும் உண்டு.  கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் ரிபோக் நிறுவனத்தின் பேட்டை பயன்படுத்தினார்.


அதில் ஆரம்பத்தில் கருப்பு நிறத்திலும், அதன் பிறகு நீலம் மற்றும் வெள்ளை நிறம் கொண்டதாக ரிபோக் நிறுவனம் பேட்டில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் எம்ஆர்எஃப் பேட்டை பயன்படுத்தினார். அதன் பிறகு டான் ஆக் மாறினார். டான் பேட்டை பயன்படுத்தி விளையாடி வந்தார். இது அவருக்காகவே தயாரிக்கப்பட்டது. அவரை டான் ரோகித், ஹிட் மேன் ரோகித் என்றே பலரும் அழைத்தனர்.


நிகர சொத்து மதிப்பு:


மார்ச் 25, 2024 நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.214 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.


பிசிசிஐ சம்பளம்:


பிசிசிஐ வருடத்திற்கு ஒருமுறை போடப்படும் ஒப்பந்தத்தில் ரோகித் சர்மா A+ எனப்படும் முதல் தர பிரிவில் உள்ளார். இதனால் இவருக்கு ஆண்டு வருமானமாக ரூ.7 கோடி தரப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கு தனி ஊதியம் வழங்குகிறது. அதில் ரோகித் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் என பெற்று வருகிறார்.


ஐபிஎல் சம்பளம்:


ஐபிஎல் சீசன்களை பொறுத்தவரை  2022 மெகா ஏலத்திற்கு முன்னதாக 16 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா தக்கவைக்கப்பட்டுள்ளார். 


வீட்டின் மதிப்பு:


மும்பையில் உள்ள வார்லி என்ற இடத்தில் 6000 சதுர அடி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைரா ஷர்மாவுடன் வசித்துவருகிறார். 29வது மாடியில் இருக்கும் இந்த வீட்டில் இருந்து பார்த்தால் அரபிக் கடலின் காட்சி தெளிவாக இருக்கும். அவரின் அந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி ஆகும்.


கார் வகைகள்:


கார்வகைகளை பொறுத்தவரை ரோஹித் ஷர்மாவின் சேகரிப்பில் ஸ்கோடா லாரா, டொயோட்டா ஃபார்ச்சூனர், BMW X3, Mercedes GLS 400d மற்றும் BMW M5 (Formula One Edition) உள்ளிட்ட கார்கள் இருக்கின்றன. கடந்த வருடம் அவர்  ரூபார்  3.15 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் வகை காரை வாங்கினார் என்பது கூடுதல் தகவல்.


ரோகித் சர்மாவின் தொண்டு:


விளையாட்டைத்தாண்டி ரோகித் சர்மா பல்வேறு தொண்டுகளை செய்துவருகிறார். கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்கு புற்றுநோய்க்கான சிகிச்சையை இலவசமாக அளித்து வருகிறார்.  கோவிட்-19 நிவாரண முயற்சிகளுக்கு ரூ.80 லட்சத்தை வழங்கியுள்ளார்.