ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் ஏன் விளையாடவில்லை என்கிற கேள்விகளுக்கு கேப்டன் ரோகித் சர்மா மவுனம் கலைத்துள்ளார். 


ரோகித் சர்மா விலகல்: 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்பிரீத் பும்ரா அணியை வழிநடத்துகிறார். இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 டெஸ்ட் போட்டியில் 5 இன்னிங்ஸ்களை விளையாடிய ரோகித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தான் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலகினார். மேலும் அவர் சிட்னி டெஸ்ட்டுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகின. 


இதையும் படிங்க: Pongal Special Trains : தென் மாவட்ட மக்களே.. பொங்கலுக்கு ஊருக்கு போகனுமா! சிறப்பு ரயில்களை இறக்கிய தெற்கு ரயில்வே.. முழு விவரம்


மவுனம் கலைத்த ரோகித்: 


இது குறித்து உணவு இடைவேளையின் போது பேசிய ரோகித் "நான் கொஞ்சம் சரியாக ஆடவில்லை, அதைத்தான் நான் கூறுவேன். பயிற்சியாளர் மற்றும் தேர்வாளருடன் நான் நடத்திய உரையாடல் மிகவும் எளிமையானது, என்னால் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியவில்லை. நான் ஃபார்மிலும் இல்லை. இது ஒரு முக்கியமான போட்டி, என்பதால் எங்களின் வெற்றியே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது 


"சிட்னியில் விளையாட வேண்டாம் என்பது குறித்து வெகு நேரம் யோசித்து கொண்டு இருந்தேன். பின்னர் சிட்னி  வந்த பிறகு முடிவு எடுக்கப்பட்டது. மெல்போர்னன் டெஸ்டுக்கு பிறகு புத்தாண்டு தினம் என்பதால் அன்று பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரிடம் இதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அதன் பிறகு தான் அவர்களிடம் இந்த முடிவை தெரிவித்தேன். இந்த போட்டியில் இருந்து ஒதுங்கியது எனக்கு முக்கியமானது."


இதையும் படிங்க: Jasprit Bumrah: என்னாச்சு கேப்டன் பும்ராவிற்கு? அவசர அவசரமாக வெளியேற்றம், காரில் சென்றது எங்கே? ஆஸி., டெஸ்ட் நிலை?


இப்போதைக்கு ஓய்வு இல்லை: 


மேலும் தனது ஓய்வு குறித்து பேசிய ரோகித்” "ஐந்து மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த முடிவு ஓய்வு முடிவு அல்ல. நான் விளையாட்டிலிருந்து விலகப் போவதில்லை. ஆனால், இந்த விளையாட்டிற்காக, நான் வெளியே இருக்கிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் ரன்களை அடிக்க மாட்டேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.


"அதே நேரத்தில் நானும் யதார்த்தமாக இருக்க வேண்டும். நான் இந்த விளையாட்டை இவ்வளவு காலமாக விளையாடினேன். நான் எப்போது செல்ல வேண்டும், எப்போது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் தீர்மானிக்க முடியாது. நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்." என்றார் ரோகித் சர்மா