இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் டி20 போட்டி தற்போது நாக்பூரில் நடைபெற்று வருகிறது. மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக 8 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி  8 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது.


 






இந்நிலையில் 91 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ரோகித் சர்மா முதல் ஓவரில் 3 சிக்சர் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 175 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். டி20 வரலாற்றில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார். 


 






தற்போது வரை 130 இன்னிங்ஸில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 175 சிக்சர்கள் விளாசி முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மார்டின் கப்டில் 114 இன்னிங்ஸில் 172 சிக்சர்கள் விளாசியுள்ளார். மூன்றாவது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 124 சிக்சர்கள் விளாசி பிடித்துள்ளார்.


 ஏற்கெனவே சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். இவர் 138 டி20 போட்டிகளில் விளையாடி 3677 ரன்கள் விளாசியுள்ளார். இந்தப் பட்டியலில் மற்றொரு இந்திய வீரர் விராட் கோலி 3597 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் 3497 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். 


8 வது டி20 உலக கோப்பையில் விளையாட உள்ள வீரர்கள்:


கடந்த 2007 முதல் இதுவரை 7 டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. அடுத்த அக்டோபர் மாதம் தொடங்கும் தொடரானது 8 வது டி20 உலக கோப்பை தொடர். இந்த நிலையில், வருகிற உலக கோப்பை தொடரையும் சேர்த்து ரோகித் சர்மா மற்றும் ஷகிப் அல் ஹசன் தங்களது 8வது உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர். 


இதன் மூலம், 7 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்று 8 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்றவுள்ள வீரர்கள் என்ற பெருமையை ரோகித் மற்றும் ஷகிப் பெற இருக்கின்றனர்.