இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இது இங்கிலாந்து நாட்டில் உருவாகி இருந்தாலும், ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்தியாவிற்கு வந்திருந்தாலும் இன்றுவரை இந்தியர்களின் மனதை கவர்ந்த வண்ணமே உள்ளது. இதுவரை கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் டி20 என்றும் மூன்று விதமான போட்டிகள் சர்வதேச அளவில் விளையாடப்படுகிறது. தற்போது இந்திய அணி டெஸ்ட் மற்றும் டி 20 தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட்டை வலுப்படுத்தவும் இளம் வீரர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பல விதமான போட்டிகள் நடந்து கொண்டே இருகிறது. தமிழக அளவில் டி.என்.பி.எல் என்றும் இந்தியா அளவில் ஐ.பி.எல் என்றும் இளம் வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் உருவாகியுள்ளது. இந்த தொடர்களில் மூலம்தான் பல வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளனர். சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், நடராஜன், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற பலர் இந்த தொடரின் மூலம்தான் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர்.
இப்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது அறிமுகப் போட்டியில் சதம் விளாசி உலக கிரிக்கெட் அரங்கையே தன்பக்கம் ஈர்த்துள்ளார். இதற்கு முன்னர் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியவர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
முதல் போடியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்கள்
இந்திய அணிக்காக விளையாடி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இதுவரை 17 இந்திய வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.இந்த பட்டியலில் அறிமுக போட்டியில் சதம் அடித்த வீரர் லாலா அமர்நாத். இங்கிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் 118 ரன்கள் எடுத்து அசத்தினார். அதன் பின்னர், தீபக் சோதன் (110), ஏஜி கிருபால் சிங்(100*), அப்பாஸ் அலி பெய்க்(112), ஹனுமந்த் சிங்(105), குண்டப்பா விஸ்வநாத்(137), சுரிந்தர் அமர்நாத்(124), முகமது அசாருதீன்(110), பிரவீன் ஆம்ரே(103), சவுரவ் கங்குலி(133), வீரேந்திர சேவாக்(105), சுரேஷ் ரெய்னா(120), ஷிகர் தவான்(187), ரோஹித் ஷர்மா(177), பிரித்வி ஷா(134), ஸ்ரேயாஸ் ஐயர்(105) கடைசியாக சதம் வீளாசிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்(154*) என மொத்தம் 17 வீரர்கள் தனது முதல் டெஸ்ட் போடியிலேயே சதம் அடித்த அசத்தியவர்கள்
இந்திய அணியின் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்த வீரர்கள்
1.ஷிகர் தவான் (187)
ஷிகர் தவான் 2013 ஆம் ஆண்டு மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் வெறும் 174 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட ஷிகர் தவான் 33 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என்று மொத்தம் 187 ரன்கள் அடித்து மிரளவைத்தார். இந்திய அளவில் இவர் தான் இதுவரை அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையுடன் உள்ளார்.
2.ரோகித் ஷர்மா (177)
ரோகித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 177 ரன்கள் எடுத்து அசத்தினார்.
3.யஷஸ்வி ஜெய்ஸ்வால் (154*)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுபயணம் சென்றுள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டி, மூன்று ஓடிஐ மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை 367 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகளுடன் 154 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.
4.குண்டப்பா விஸ்வநாத் (137)
குண்டப்பா விஸ்வநாத் 1969 ஆம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 137 ரன்கள் அடித்து அசத்தினார்.
5.பிரித்வி ஷா (134)
பிரித்வி ஷா 2018 ஆம் ஆண்டு ராஜ்கோடில் உள்ள மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 134 ரன்கள் குவித்தார்.