ராஜூவ் காந்தி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் உட்பட மூன்று ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட அட்டவணையின்படி, ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையின் மூன்று லீக் போட்டிகள் ஹைதராபாத் உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 

இந்த ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் அணி தகுதிச் சுற்றுடன் இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது. பாகிஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் அக்டோபர் 6-ம் தேதி குவாலிபையர் 1 மற்றும் அக்டோபர் 12-ம் தேதி குவாலிபையர் 2-ல் விளையாடுகிறது. இதேபோல், நியூசிலாந்தும் அக்டோபர் 9 ஆம் தேதி தகுதிச் சுற்று 1 உடன் விளையாடுகிறது. 

துரதிர்ஷ்டவசமாக, ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு போட்டிகளில் கூட இந்திய அணி விளையாடவில்லை. இதனால், ஹைதராபாத் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். மேலும், இந்த மைதானத்தில் மற்ற அணிகள் விளையாடும் போட்டிகள் அனைத்து  ஸ்வாரஸ்யம் குறைந்த போட்டிகளாகவே கருதப்படுகிறது. 

ஹைதராபாத்தில் நடக்கும் போட்டிகள் இதோ

தேதி விளையாடும் அணிகள்
அக்டோபர் 5 பாகிஸ்தான் vs குவாலிஃபையர் 1
அக்டோபர் 9 நியூசிலாந்து vs குவாலிஃபையர் 1
அக்டோபர் 12 பாகிஸ்தான் vs குவாலிஃபையர் 2

இந்தியாவில் உள்ள பத்து மைதானங்களில் 46 நாட்கள் 10 அணிகளிடையே ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும். 2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.

ஒரு போட்டிகள் கூட நடைபெறாத மொஹாலி ஸ்டேடியம்: 

மொஹாலி ஸ்டேடியம் ஏன் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இடமாக தேர்வு செய்யப்படவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரு போட்டி கூட பெறவில்லை என கேள்வி எழுந்தநிலையில், இந்த மைதானம் போதிய ஐசிசியின் தரத்தை பூர்த்தி செய்யவில்லை என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான 2011 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி மொஹாலி மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அப்படியான, சிறப்பு வாய்ந்த ஸ்டேடியம் இது. அதேபோல், 1996 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியும், ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே இதே மைதானத்தில் நடந்தது. 

நரேந்திர மோடி மைதானத்திற்கு மட்டும் இவ்வளவு ஹைப் ஏன்..? 

ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உலகக் கோப்பை அட்டவணையை அறிவித்தது முதல், சில எதிர்க்கட்சித் தலைவர்கள் அட்டவணையில் அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பல மைதானங்களுடன் ஒப்பிடும்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மட்டும் ஏன் பிக்-டிக்கெட் போட்டிகள் நடைபெறுகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அகமதாபாத், நரேந்திர மோடி மைதானம் 

  • அக்டோபர் 5 - இங்கிலாந்து vs நியூசிலாந்து
  • அக்டோபர் 15 - இந்தியா vs பாகிஸ்தான்
  • நவம்பர் 4 - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
  • நவம்பர் 10 - தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான்
  • நவம்பர் 19  - இறுதிப்போட்டி