ஐசிசி உலகக்கோப்பைத் தொடரை இம்முறை இந்தியா நடத்துகிறது. இந்தியாவில் உள்ள 12 சிறந்த மைதானங்களில் போட்டிகளை நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதற்கு ஏற்ற வகையில் 12 மைதானங்களையும் மேம்படுத்தி வருகின்றது. இந்திய அணி இந்த ஆண்டு தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 8ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கின்றது. இந்நிலையில் இந்த போட்டி உட்பட இந்தியா பங்கேற்கும் பாகிஸ்தான் அணியினுடனான போட்டி உட்பட அனைத்து லீக் போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை இன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்கியது. இந்த போட்டிக்கான டிக்கெட் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் எனும் நோக்கில் புக்-மை-ஷோவில் விற்பனை செய்யப்பட்டது. 




குறிப்பாக இன்றைக்கு விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டது. விற்பனை துவங்கியதும் ஏராளமான ரசிகர்கள் தளத்தை பயன்படுத்தியதால் புக்-மை-ஷோ தளமே ஸ்தம்பித்தது. இதனால் பலருக்கும் வெயிட்டிங் நேரம் காட்டியது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியது. குறிப்பாக பலருக்கு பல மணி நேரம் டிக்கெட்டுகள் கிடைப்பதற்காக காத்திருக்க வேண்டும் என புக்-மை-ஷோ தளத்தில் காட்டியதால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். 


இந்நிலையில் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் லீக் போட்டிகளில் இந்த போட்டியும் ஒன்று. இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 




இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கான மாற்று வழி.. 


இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்கள் மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் இன்று அதாவது ஆகஸ்ட் 29ஆம் தேதி விற்பனை செய்யப்பட்டது. இதில் மாஸ்டர் கார்டு வைத்திருப்பவர்களுக்கான டிக்கெட்டுகள் மட்டும் தற்போது விற்பனை செய்யட்டுள்ளதால், மற்றவகை கார்டு வைத்திருப்பவர்களுக்கு வரும் செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 8 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யபப்டவுள்ளது. இதனால் ரசிகர்கள் இதனைப் பயன்படுத்தியும் டிக்கெட்டுகளைப் பெற முடியும். 


மற்ற அனைத்து பயனர்களுக்கான டிக்கெட் விற்பனையும் கீழே உள்ள கட்டங்களின்படி பிரிக்கப்பட்டுள்ளது:


ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8 மணி முதல்:  இந்தியா அல்லாத வார்ம்-அப் போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத மற்ற அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 


ஆகஸ்ட் 30 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  கவுஹாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 


ஆகஸ்ட் 31 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  சென்னை, டெல்லி மற்றும் புனேவில் நடைபெறும் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 


செப்டம்பர் 1 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  தர்மசாலா, லக்னோ மற்றும் மும்பையில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 


செப்டம்பர் 2 ஆம் தேதி  இரவு 8 மணி முதல்:  பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 


செப்டம்பர் 3 ஆம் தேதி  இரவு 8 மணி முதல் :  அகமதாபாத்தில் இந்தியா போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது. 


செப்டம்பர் 15ஆம் தேதி  இரவு 8 மணி முதல் :  அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளது.