NED vs SL: நெதர்லாந்தை வீழ்த்தியது இலங்கை! நடப்பு உலகக் கோப்பையில் முதல் வெற்றி..!

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.

Continues below advertisement

உலகக் கோப்பைத் தொடரில் இன்று காலை தொடங்கிய ஆட்டத்தில் நெதர்லாந்து – இலங்கை அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி சைப்ரண்ட் – வான் பீக் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 262 ரன்களை எடுத்தது.

Continues below advertisement

இதையடுத்து, 263 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், நிசங்காவின் சிறப்பான அரைசதத்தாலும், சமரவிக்ரமா ஆட்டமிழக்காமல் 91 ரன்களை எடுத்ததாலும் 48.2 ஓவர்களில் 263 ரன்களை எட்டி அபார வெற்றி பெற்றனர். இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதல் வெற்றியை இலங்கை அணி பெற்றுள்ளது.  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola