13வது உலகக் கோப்பைத் தொடர் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இதில் களமிறங்கியுள்ள ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெற களமிறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் மிகத் தீவிரமாக வெற்றிக்காக போராடி வருகின்றன. இதில் இன்று அதாவது அக்டோபர் 11ஆம் தேதி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள இந்தியாவும், ஒன்பதாவது இடத்தில் உள்ள ஆஃப்கானிஸ்தானும் மோதவுள்ளன. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு இன்று பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே மோதியுள்ளது. மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவில்லாமல் நிறுத்தப்பட்டது. . 2014 ஆம் ஆண்டு மிர்பூரில் இரு அணிகளும் முதல்முறையாக சந்தித்தது. இதில், இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையில் ஒரே ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளன. அதிலும், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆப்கானிஸ்தான் பிளேயிங் லெவன்:
ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி(கேப்டன்), நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன் உல்-ஹக் ஃபரூக்ஹல்ஹாக்,
இந்தியா பிளேயிங் லெவன்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்