Nepal vs Italy T20 WC: லிஸ்ட்டில் இல்லாத இந்தியா! வரலாற்றில் இடம்பிடித்த இத்தாலி.. நேபாளத்தை 10 விக்கெட் வித்தாயசத்தில் வீழ்த்தி முதல் வெற்றி..
Nepal vs Italy T20 World Cup 2026: இத்தாலி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் மூலம் இத்தாலி அணி தங்களது முதலாவது உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.

டி20 உலகக்கோப்பை போட்டியில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது இத்தாலி அணி
உலகக்கோப்பை தொடர்:
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது, சூப்பர் 8 சுற்றுக்கள் செல்ல இந்த வாரம் நடைப்பெறும் போட்டிகள் முக்கியம் என்பதால் அனைத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடி வருகிறது.
நேபாளம் vs இத்தாலி:
இன்று நடந்த குரூப் சி போட்டியில் நேபாளம் மற்றும் இத்தாலி அணிகள் மோதின, இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி அணி கேப்டன் ஹாரி மனென்டி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது, நேபாள அணி ஆரம்பம் முதலே இத்தாலி அணியின் பந்து வீச்சை அடித்து ஆட வேண்டும் என்கிற மனநிலையிலேயே நேபாள அணி பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.
நேபாளம் ஆல் அவுட்:
இத்தாலி அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நேபாள அணியின் பேட்ஸ்மேன்கள் பெவிலியன் போவதும் வருவதுமாக இருந்தனர், இதனால் நேபாள அணி 19.3 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அந்த அணியில் அதிகப்பட்சமாக ஆரிஃப் ஷேக் 27 ரன்களும், கேப்டன் ஆசிப் ஷேக் 20 ரன்கள், ரோகித் பவுடல் 23 ரன்கள் எடுத்தனர், மற்ற பேட்ஸ்மென்கள் சொற்ப ரன்களுக்கு நடையைக் கட்டினர். இத்தாலி தரப்பில் கிரிஷான் கலுகமகே 3 விக்கெட்டும், பென் மனென்டி2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இத்தாலி ஆபார வெற்றி:
இத்தாலி அணி 125 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கியது, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜஸ்டின் மோஸ்கா, ஆண்டனி மோஸ்கா இருவரும் முதல் ஓவரில் இருந்து தனது அதிரடியை தொடங்கினர், இருவரும் நேபாள அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் இத்தாலி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, இந்த வெற்றியின் இத்தாலி அணி தங்களது முதலாவது உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.
ஓப்பனர்கள் செய்த சாதனை:
ஜஸ்டின் மோஸ்கா மற்றும் அந்தோணி மோஸ்காவின் 124*ரன்கள் பார்ட்னர்ஷிப், T20 உலகக் கோப்பைகளில் சகோதரர்களுக்கிடையேயான அதிகபட்சமாகும், இதற்கு முன்னர் 2014 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கம்ரான் அக்மல் மற்றும் உமர் அக்மலின் 96 ரன்கள் என்கிற சாதனையை முறியடித்தனர்.




















