டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் நான்காவது லீக் ஆட்டம் இன்று சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி எதிர்கொண்டது. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பில்டிங்கை தேர்வு செய்தது. 



முதல் இன்னிங்ஸ்: 


சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சந்தோஷ் குமார் மற்றும் ஜெகதீசன் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினர். சேப்பாக் அணியின் வீரர் சந்தோஷ் குமார் 29 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய தொடக்க வீரர் ஜெகதீசன் 39 பந்துகளில் அரை சதம் அடித்தார். பொறுப்புடன் விளையாடிய சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபரஜீத் 18 பந்துகளில் 24 ரன்களை அடித்து பெவிலியர் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சித்தார்த் 17 ரன்களுக்கும், அபிஷேக் 3 ரன்களுக்கும் ஆட்டமிருந்தனர். ஆட்டத்தில் 18வது ஓவரை வீசிய நெல்லை அணியின் பந்துவீச்சாளர் சிலம்பரசன் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை எடுத்தார். ஒருபுறம் வீரர்கள் விக்கெட்டை இழந்தாலும், மறுபுறம் விளையாடிய ஜெகதீசன் 46 பண்டுகளில் 63 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். பந்துவீச்சை பொறுத்தவரை நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் வீரர் சிலம்பரசன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் மோகன் பிரசாத் மற்றும் சோனு யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை அடித்தது. 



இரண்டாவது இன்னிங்ஸ்:


167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய நெல்லை அணியின் கேப்டன் அருண் கார்த்திக் 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான மோகித் ஹரிஹரன் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் அரை சதம் அடித்தார். அரை சதம் அடித்து அடுத்த மூன்று பந்துகளில் மோகித் ஹரிஹரன் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களம் இறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நெல்லை அணியின் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய கிருபாகரன் 3 ரன்களில் ரிட்டயிட் அவுட் செய்தார். இந்த போட்டியில் இறுதி ஓவர் 20 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், நெல்லை அணியில் அதிரடியாக விளையாடிய நிதீஷ் ராஜகோபால் 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். நித்திஷ் ராஜகோபால் ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பௌண்டரிகளை விலாசி நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வெற்றி பெற செய்தார். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய டரியல் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். கேப்டன் பாபா அபரஜீத், அஸ்வின் கிரிஸ்ட், பெரியசாமி தல ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டத்தில் இறுதிவரை யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை மிகுந்த ஆர்வத்துடன் போட்டியை கண்டு களித்தனர்.


நெல்லை ராயல் கங்ஸ் அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற செய்த நித்திஷ் ராஜகோபாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.


நேற்று மதுரை பேந்தர்ஸ் அணி இதேபோல இறுதி ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து முருகன் அஸ்வின் த்ரில் வெற்றி பெறச்செய்தது குறிப்பிடத்தக்கது.