மொரோக்கோ அணியின் கோல் கீப்பர் யாசின் பவுனோவின் மகன் மைக்கை ஐஸ்கீரிம் என்று எண்ணி நக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி கடந்த 14ம் தேதி நடந்து முடிந்தது. அதில், பிரான்ஸ் அணி மொரோக்கோ அணியை 2 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.


பிரான்ஸ் - மொராக்கோ மோதல்:


இரு அணியின் ரசிகர்களும் போட்டி நடந்த ஆல் பையட் மைதானத்தில் நிரம்பியிருந்த நிலையில் போட்டி பரபரப்பாக தொடங்கியது. போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பெரும்பாலும் பலர் எதிர்பார்த்ததைப் போல் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. போட்டியின் 5வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் தியோ கெர்னாண்டஸ் அந்தரத்தில் பறந்தபடி முதல் கோலினை அடிக்க, போட்டியில் பரபரப்பு மேலும் எகிறியது. அதன் பின்னர், நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு சவால் கொடுக்கும் வகையில் மொரோக்கோ அணியினர் தொடர்ந்து விளையாடிவந்தனர்.


முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் எதுவும் போடப்படவில்லை. இதனால் பிரான்ஸ் அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. போட்டியின் இரண்டாவது பாதியில்  79வது நிமிடத்தில் எம்பாப்வே பந்தை அசிஸ்ட் செய்ய அதனை, கோல் போஸ்டிடம் நின்றிருந்த ரந்தல் கோலோ முவானி கோலாக மாற்றினார். இந்த இரண்டாவது கோல் மூலம் பிரான்ஸ் அணி உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 


மைக்கிய நக்கியது ஏன்?


தோல்விக்கு பிறகு மொராக்கோ கோல் கீப்பர் யாசின் பவுனோ, தனது மகனை இடுப்பில் வைத்துக்கொண்டு தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, யாசின் இடுப்பில் இருந்த மகன், தனக்கு அருகிலிருந்த மைக்கை ஜஸ்கீரிம் என நினைத்து நக்கினான். அப்போது க்யூட் செயலை பார்த்து சிரித்தார். 






தொகுப்பாளர் அந்த நேரத்தில் மைக்கை பின்னாடி எடுக்கக்கொள்ள, யாசினின் மகன் தனது தந்தையின் கன்னத்தை பிடித்து கொஞ்சினான். தொடர்ந்து, யாசினிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர் மீண்டும் பதிலளிக்க, யாசின் முன் நீட்டியபோது, அவரது மகன் மீண்டும் ஐஸ்கீரிம் என எண்ணி, நக்க தனது நாக்கை நீட்டினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, ஃபிபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது. 


போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கு, காத்திருப்பது மேஜிகல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா அணி. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் மீண்டும் ஒரு சுவாரஸ்யமான இறுதிப்போட்டி இன்று (டிசம்பர்,18) இரவு 8.30 மணிக்கு லுசைல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இறுதிப் போட்டிக்கான முன்னேற்பாடுகள் கத்தாரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு முன்னதாக மூன்றாவது இடத்துக்கான போட்டி சனிக்கிழமை இன்று (டிசம்பர்,17) நடைபெறவுள்ளது. அதில் குரோஷிய அணியும் மொரோக்கோ அணியும் மோதவுள்ளன.