மேஜர் லீக் கிரிக்கெட்(எம்.எல்.சி) என்ற கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த போட்டி கடந்த ஜூலை 12 ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 30 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை மொத்தம் 13 போட்டிகள் நடைபெற்று உள்ளன. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் ஆரம்பம் முதலே  ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த போட்டியில் சியாடடில் ஓர்காஸ் சிறப்பாக ஆடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. சிறப்பான ஃபார்மில் தற்போது ஆடிவரும் சியாடடில் ஓர்காஸ் நேற்று நடந்த போட்டியிலும் எம்ஐ நியூயார்க் அணியை கடைசி ஓவரில் விழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.                         


சியாடடில் ஓர்காஸ் 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியை பெற்று முதல் இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மூன்றில் மட்டும் வெற்றிப்பெற்று இரண்டாவது இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய வாஷிங்டன் ஃப்ரீடம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 3வது இடத்திலும் உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் இதுவரை நடந்த 5 போட்டிகள் விளையாடி தற்போதுதான் முதல் போட்டியில் வெற்றிப்பெற்று உள்ளது.




புள்ளி பட்டியல்







5
4
1
8
+0.725



 
 டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்


5
3
2
6
+0.570




வாஷிங்டன் ஃப்ரீடம்



5
3
2
6
+0.097





எம் ஐ நியூ யார்க்




5
2
3
4
+1.004





சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்




5
2
3
4
-0.303



 லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ்


5
1
4
2
-2.028



 

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

 

ஐந்து போட்டிகளில் விளையாடி 231 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார் ஹென்ரிச் கிளாசன். நிக்கோலஸ் பூரன் ஐந்து போட்டிகளில் விளையாடி 227 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் 206 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

 


சிறந்த பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட்ஸ்


ட்ரெண்ட் போல்ட் மூன்று போட்டிகளில் மட்டும் விளையாடி 223.07 ஸ்ட்ரைக் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். ஹென்ரிச் கிளாசன் ஐந்து போட்டிகளில் விளையாடி 206.25 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரண்டாம் இடத்திலும், ஷாட்லி வான் ஷால்க்விக்  ஒரே ஒரு  போட்டிகளில் மட்டும் விளையாடி 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.




அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்


ட்ரெண்ட் போல்ட் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்து முதல் இடத்தில் உள்ளார். கேமரூன் கெனன்  ஐந்து  போடிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆடம் ஜாம்பா  5 விளையாடி 9 விக்கெட்டுகளை எடுத்து  மூன்றாம் இடத்தில் உள்ளனர்.


பெஸ்ட் பௌலிங் எகானமி


மூன்று போட்டிகளில் விளையாடி 5.9 எகானமியுடன் முதல் இடத்தில் நோஸ்துஸ் கெஞ்சிகே உள்ளார் . 6.39 எகானமியுடன் இமாத் வாசிம் இரண்டாம் இடத்திலும், சுனில் நரைன் 6.4 எகானமியுடன் நான்கு இடத்திலும் உள்ளனர்.