வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.


இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடினார். முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 133 பந்துகள் களத்தில் நின்று 11 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 113 ரன்கள் எடுத்தார். அதேபோல், இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின், 21 ஓவர்கள் வீசினார். அதில், 88 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதோடு ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். அதோடு பல்வேறு சாதனைகளையும் இந்த தொடர் மூலம் படைத்தார். அவை என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல்:


1. முத்தையா முரளிதரன் (இலங்கை) – 67  
2. ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) – 37  
3. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 37  
4. ரிச்சர்ட் ஹாட்லீ (நியூசிலாந்து) – 36  
5. அனில் கும்ப்ளே (இந்தியா) – 35  


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) அதிக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல்:


1. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 11  
2. நாதன் லியான் (ஆஸ்திரேலியா) – 10  
3. பாட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) – 8  
4. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) – 7  
5. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸ்திரேலியா) – 6  
6. டிம் சவுத்தி ( நியூசிலாந்து) - 6


நான்காவது இன்னிங்சில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல்:


1. ரவிச்சந்திரன் அஸ்வின் – 99  
2. அனில் கும்ப்ளே – 94  
3. பிஷன் பேடி – 60  
4. இஷாந்த் சர்மா / ரவீந்திர ஜடேஜா – 54


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியல்:


1. முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800 விக்கெட்டுகள்  
2. ஷேன் வார்ன் (ஆஸ்திரேலியா) – 708 விக்கெட்டுகள்  
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 704 விக்கெட்டுகள்  
4. அனில் கும்ப்ளே (இந்தியா) – 619 விக்கெட்டுகள்  
5. ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 604 விக்கெட்டுகள்  
6. கிளென் மெக்ராத் (ஆஸ்திரேலியா) – 563 விக்கெட்கள்  
7. நாதன் லியான் (ஆஸ்திரேலியா) – 530   விக்கெட்கள்  
8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 522 விக்கெட்டுகள்
9. கர்ட்னி வால்ஷ் (மேற்கிந்தியத் தீவுகள்) – 519 விக்கெட்டுகள்  


10. டாலி ஸ்டெயின் (தென்னாப்பிரிக்க)- 439 விக்கெட்டுகள்