மேலும் அறிய

IPL 2026 Champion: ஈ சாலா கப் மீண்டும் நமதே! ஐபிஎல் மகுடத்தை மீண்டும் சூடியது ஆர்சிபி! கோலியாண்டவர் ருத்ரதாண்டவம்!

IPL 2026 Champion: அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

IPL 2026 Champion: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் நடந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ஆர்சிபி அணிகள் தங்களது இரண்டாவது கோப்பையை கைப்பற்ற களமிறங்கினர். 

156 ரன்கள் டார்கெட்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் குஜராத்தை பேட் செய்ய அழைத்தார். ஹேசில்வுட், புவனேஷ்வர், ரஷீ்க் சலார், குருணல் பாண்ட்யாவின் அபார பந்துவீச்சால் 155 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதையடுத்து, 156 ரன்கள் என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது. 

காயத்துடன் அதிரடி காட்டிய வெங்கடேஷ்:

ஆர்சிபி அணிக்காக விராட் கோலி - வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் மிகவும் அபாரமாக ஆடினர். முகமது சிராஜுன் பந்துவீச்சால் காலில் ஏற்பட்ட காயத்துடன் ஆடிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியாகவே ஆடினார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச மறுமுனையில் விராட் கோலியும் அதிரடி காட்டினார். அவர் ரபாடா வீசிய பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாசினார்.

அபாரமாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் முகமது சிராஜ் பந்தில் அவுட்டானார். அவர் காயத்துடன் ஆடி 16 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ரபாடா பந்தில் 1 ரன்னில் அவுட்டானார். ஆனாலும், ரன் வேகம் குறையாமலே இருந்ததால் ஆட்டம் ஆர்சிபி-யின் கட்டுக்குள்ளே இருந்தது.

அச்சுறுத்திய ரஷீத்:

அடுத்து விராட் கோலி - கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி பதட்டமின்றி ஆடியது. எஞ்சிய பந்துகளை காட்டிலும் தேவைப்படும் ரன்கள் குறைவாக இருக்கும் வகையிலே இந்த ஜோடி பார்த்துக் கொண்டது. ரஷீத்கான் வீசிய ஓவரில் கேப்டன் ரஜத் படிதார் அவுட்டானார். அவர் 13 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்களில் அவுட்டானார். அப்போது, குருணல் பாண்ட்யா - விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். அதே ஓவரில் குருணல் பாண்ட்யாவும் 1 ரன்னில் அவுட்டானார். இதனால், ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. 

கோலி அரைசதம்:

இதன்பின்னர், விராட் கோலியுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தனர். நெருக்கடியான சூழலில் இணைந்த இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடியது. ரஷீத்கான் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்ததால் அவருக்கே கேப்டன் கில் வாய்ப்பு கொடுத்தார். இதனால், அவரது பந்தை நிதானமாகவே இவர்கள் ஆடினார்கள். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விளாசினார்.

மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய விராட் கோலி 25 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த டிம் டேவிட் சிக்ஸர், பவுண்டரி விளாசி அழுத்தம் இல்லாமல் அணியை கொண்டு சென்றார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டிம் டேவிட் 17 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24 ரன்களுடன் அவுட்டானார். வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே ஆபர்சிபிக்கு தேவைப்பட்டது.

சேஸ் மாஸ்டர்:

விராட் கோலியுடன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தார். விராட் கோலி தனது அனுபவத்தால் பதட்டமே இல்லாமல் ஆடி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். இதனால், ஆர்சிபி பதட்டம் இல்லாமல் ஆடியது. அவருக்கு ஜிதேஷ் சர்மாவும் ஒத்துழைப்பு அளித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விராட் கோலிக்கு வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சுப்மன்கில் அவருக்கு கேட்ச் பிடித்தார். ஆனால், டிவி ரீப்ளே-யில் சுப்மன்கில் பிடித்த பந்து தரையில் பட்டது தெரியவந்தது. இதனால், அது நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. 

விராட் கோலி தான் அவுட் இல்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார். இதனால், ரீப்ளே-யில் கேட்டு நாட் அவுட் என்று அறிவிக்கப்பட்டது. கடைசி 4 ஓவர்களில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆர்சிபி மீண்டும் சாம்பியன்:

விராட் கோலிக்கு காலில் ஏற்பட்ட காயத்துடன் அணிக்காக உறுதியாக ஆடினார். அவருக்கு ஜிதேஷ் சர்மாவும் ஒத்துழைப்பு அளித்தார். விராட் கோலி பவுண்டரி விளாசி ஸ்கோரை சமன் செய்தார். கடைசியில் 18வது ஓவரின் முடிவில் விராட் கோலி சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். 

இதன்மூலம் ஆர்சிபி அணி இரண்டாவது முறையாகவும், தொடர்ச்சியாக 2வது முறையாகவும் ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியது. 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. விராட் கோலி கடைசி வரை அவுட்டாகாமல் 42 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 75 ரன்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார். ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியை ஆர்சிபி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். 

 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
தோனி, ரோகித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்.. ஆர்சிபி-யின் அசுர வளர்ச்சி! பாராட்டிய முன்னாள் வீரர்
தோனி, ரோகித் வரிசையில் இணைந்த ரஜத் படிதார்.. ஆர்சிபி-யின் அசுர வளர்ச்சி! பாராட்டிய முன்னாள் வீரர்
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
ஹாப்பி பர்த்டே மாஸ்டர் மைண்ட் தினேஷ் கார்த்திக்.. மாஸ் கேப்டன் துரந்தர் படிதார்! சாம்பியன் பட்டம்தான் ட்ரீட்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Senthil Balaji: நள்ளிரவில் திமுக ஷாக்..! செந்தில் பாலாஜி வழக்கு, அமலாக்கத்துறைக்கு ஓகே சொன்ன ஆளுநர்?
Cooking Oil: சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
சமையல் எண்ணெய்க்கு கட்டுப்பாடு..! இனிமே இப்படி தான் விற்பனை செய்யனும் - மத்திய அரசு உத்தரவு
Cooking Gas Price Hike : காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே ஷாக்.! அதிரடியாக உயர்ந்தது வீட்டு சமையல் சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
இடி, மின்னல் மிரட்ட..! 14 மாவட்டங்களில் இன்று கனமழை, சென்னை? தமிழக வானிலை வார்னிங்
CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
Honda Discounts: ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
ஹைப்ரிட் தொடங்கி SUV வரை..! ரூ.2.15 லட்சம் தள்ளுபடியை தாராளமாய் தந்த ஹோண்டா - எது டாப்?
TNEB CM Vijay : ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
ஒரே நாளில் அதிரடி.! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் மின்வாரிய ஊழியர்கள்- சிஎம் விஜய் அசத்தல் அறிவிப்பு
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
Embed widget