ஐபிஎல் 2023 தொடங்க இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் தற்போது கடைசி கட்டத்தில் உள்ளது.  அணிகளின் முகாம்கள் அமைத்து தங்களது அணி வீரர்களை பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளனர்.  இந்த ஐபிஎல் தொடரில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.   முதல்முறையாக ஐபிஎல்லில் போட்டியை மொத்தமாக மாற்றக்கூடிய  விதி வரப் போகிறது. ஐபிஎல்லின் இந்த புதிய விதி அமலுக்கு வந்தால் கேப்டன்களுக்கு நல்லது. இந்த விதி குறித்து பிசிசிஐ இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை என்றாலும். ஆனால் பிசிசிஐ விரைவில் அறிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது. இது நடந்தால், டாஸ் போடுவதற்கு கேப்டன் மைதானத்துக்கு வரும்போது  கையில்  இரண்டு பேப்பரைக் கொண்டு வருவார். இதில் தனது சிறந்த இரண்டு அணிகள் இருக்கும். 


இதன்படி,  ​​​​டாஸ் போடுவதற்காக கேப்டன்கள் மைதானத்திற்கு வரும்போதும், ​​​​டாஸ் முடிந்த பின்னரும் கேப்டன்கள் தங்கள் அணி சார்பாக  விளையாடும் வீரர்களை அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் படி டாஸ் தனக்கு சாதகமாக வந்தாலும் வராவிட்டாலும், சூழலுக்கு ஏற்ப தனக்குரிய அணியை தேர்வு செய்துகொள்ள முடியும். 


டாஸில் தோற்கும் கேப்டன்கள்  போட்டியில் 11 வீரர்களில் யாரை பீல்டிங் செய்ய விரும்புகிறார்கள் என்பதை டாஸ் முடிந்த பிறகு சொல்லலாம். தற்போது வரை கேப்டன்கள் டாஸ் போடுவதற்கு முன் தங்கள் வீரர்களின் பட்டியலை கொடுக்க வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. இப்போது டாஸ் முடிந்ததும், விளையாடும் வீரர்களை அறிவிக்கலாம்.  கேப்டன் தனது சிறந்த அணியை விளையாடும் நிலைக்கு ஏற்ப களமிறக்க வேண்டும் என்பதற்காக இந்த விதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.  இதுமட்டுமின்றி, கேப்டன்கள் தங்களுக்கு தேவையான வீரரை தேர்வு செய்யவும் இந்த விதி உதவும் எனவும் கூறப்படுகிறது. 


ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக்கில் (தென்னாப்பிரிக்கா 20) இந்த விதி அமல்படுத்தப்பட்டது. இதில் டாஸ்க்குப் பிறகு அணிகள் விளையாடும் லெவனை அறிவிக்க அனுமதிக்கப்பட்டது. டாஸ்க்குப் பிறகு அணிகள் விளையாடும் லெவனை அறிவிக்கும் முன் அணிகள் அணியில் உள்ள  13 வீரர்களின்  பெயர்களை குறிப்பிடவேண்டும். அதாவது, 11 வீரர்கள் விளையாடுகிறார்கள் மற்றும் இரண்டு வீரர்கள் இம்பேக்ட் வீரர்களாக இருவர் இருப்பர். இது டாஸ் வென்று, சூழலுக்கு ஏற்ப பேட்டிங் அல்லது பந்துவீச முடிவு செய்யும் கேப்டன்கள் மட்டுமே இந்த விதியை பின்பற்ற முடியும் மற்றும் டாஸில் தோல்வி அடையும்  கேப்டனுக்கு இந்த விதி பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


ஐபிஎல் போட்டியில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் இந்த விதி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.