INDW vs SLW AsiaCup 2022 Final: மகளிருக்கான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி 7வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இலங்கை மகளிர் அணியை இந்திய அணி வீராங்கனைகள் தங்களது பவுலிங்கால் அப்பளம் போல் நொறுக்கி 7வது முறையாக கோப்பையை வெல்வதை எளிமையாக்கியுள்ளனர். 


டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதலே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் அதிரடி பந்து வீச்சால் இலங்கை அணி நொறுங்கிப் போனது.  இலங்கை அணியின் மோசமான நிலையினை நினைத்து இலங்கை அணி வீராங்கனைகள் மைதானத்திலே அழத் தொடங்கினர். முதல் பத்து ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களே எடுத்து இருந்தது. 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 65 ரன்களுகள் எடுத்து இருந்தது. 






டிரிப்பில் R வீராங்கனைகள் 


இந்திய அணியின் சார்பில் பந்து வீசிய ரேனுகா தாக்குர் 3 ஓவர்கள் பந்து வீசி  ஐந்து ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் ஒரு ஓவர் மெய்டன் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரது இந்த போட்டியின் எக்கானமி மட்டும் 1.33 ஆகும். மேலும் இந்திய அணி வீராங்கனைகளில் ரனா மற்றும் ராஜேஸ்வரி கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இவர்களது தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அதிலிருந்து இலங்கை அணி மீளவே இல்லை. மிகவும் சிறப்பாக பந்து விசிய ரேனுகா தாக்குர் போட்டியின் ஆட்ட நாயகி விருதினைப் பெற்றார்.  






அதேபோல் இந்திய அணியின் தீப்தி ஷர்மா இந்த ஆண்டு நடந்துள்ள ஆசிய கோப்பைத் தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி 94 ரன்கள் எடுத்துள்ளார். இவரது பந்து வீச்சில் இந்திய அணி இந்த தொடர் முழுவதும் பெற்ற வெற்றிகளில் இவரது பந்து வீச்சு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.


மேலும், தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசியதில் தொடர் நாயகி விருதினை பெற்றுள்ளார். இந்த ஆசிய கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி வீராங்கனைகள் மிகவும் சிறப்பாக பந்து வீசியுள்ளனர். அதிலும் குறிப்பாக தாய்லாந்து அணியை 37 ரன்களில் சுருட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.