INDW vs AUSW: த்ரில்லோ த்ரில்.. 331 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலியா.. போராடி தோற்ற இந்தியா!
INDW vs AUSW: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது.

மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.
331 ரன்கள் டார்கெட்:
இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 331 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஹேலி - லிட்ச்ஃபீல்ட் பேட்டிங்கைத் தொடங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை விரயம் செய்யாமல் ஓரிரு ரன்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசினர். சிறப்பாக ஆடிய லிட்ச்ஃபீல்ட் 439 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 40 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு எல்லீஸ் பெர்ரி களமிறங்கினார்.

அவர் தசைப்பிடிப்பு காரணமாக வெளியேற அடுத்து வந்த பெத் மூனி 4 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு சதர்லேண்ட் டக் அவுட்டானார். 170 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தியதும் இந்திய அணி உற்சாகம் அடைந்தது. பின்னர், கேப்டன் ஹேலி - கார்ட்னர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அபாரமாக ஆடியது.
ஹேலி அபார சதம்:
சிறப்பாக ஆடிய ஹேலி அரைசதம் கடந்து சதம் விளாசினார். சதம் அவருக்கு கார்ட்னர் ஒத்துழைப்பு அளிக்க ஹேலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் ஹேலி 150 ரன்களை நெருங்கிய போது ஸ்ரீவாணி பந்தில் அவுட்டானார். அவர் 107 பந்துகளில் 21 பவுண்டரி 3 சிக்ஸருடன் 142 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இதையடுத்து, இந்திய அணிக்கு நம்பிக்கை பிறந்தது. அடுத்து வந்த மெக்ராத் 12 ரன்களில் அவுட்டாக, பொறுப்புடன் ஆடுிய கார்ட்னரும் 46 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 ரன்களுக்கு அவுட்டானார். மோலினெக்ஸ் 18 ரன்களில் அவுட்டாக மீண்டும் களத்திற்குள் வந்த எல்லீஸ் பெர்ரி - கிம் கார்த்துடன் ஜோடி சேர்ந்தார்.
ஆஸ்திரேலியா வெற்றி:
இந்த ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தது. 49 ஓவர்களில் 331 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. எல்லீஸ் பெர்ரி 47 ரன்களுடனும், கிம் கார்த் 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ப்ரதிகா - மந்தனா அபாரம்:
முன்னதாக முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ப்ரதிகா ராவல் - மந்தனா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டிற்கு 155 ரன்களை சேர்த்தனர். அபாரமாக ஆடிய மந்தனா 66 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 80 ரன்களுடன் அவுட்டானார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி அரைசதத்தை கடந்த ப்ரதிகா ராவலும் அவுட்டானார். அவர் 96 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் 75 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, ஹர்லீன் தியோல் - கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். பொறுப்புடன் ஆடிய ஹர்லீன் தியோல் 42 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டானார். 17 பந்துகளில் 3 பவுண்டரி 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர், ரோட்ரிக்ஸ் - ரிச்சா கோஷ் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர்.
அசத்திய இந்திய பேட்டிங்:
இதனால், இந்திய அணி 300 ரன்களை நெருங்கியது. ரிச்சா கோஷ் 22 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆனாலும், ரோட்ரிக்ஸ் அதிரடியாக ஆட இந்தியா 300 ரன்களை எட்டியது. கடைசியில் இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 330 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இல்லாததால் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.




















