மேலும் அறிய

Ishan Kishan: இடியாய் இடிக்கும் இஷான்..! இதான்டா கம்பேக் - சிக்ஸர் சிங்கம் கிஷன் 2.0!

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்கும் இஷான்கிஷன் தனது அதிரடியான ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்குகிறார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை தாங்கள் ஆடிய  3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

மிரட்டும் இஷான்கிஷன்:

இந்திய அணியின் டி20 செயல்பாடு சமீபகாலங்களில் பாராட்டும் வகையிலே இருந்து வருகிறது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியில் சுப்மன்கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இஷான்கிஷன் சேர்க்கப்பட்டார். பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

அணியில் இடம்பெற்றது முதலே சிறப்பாக ஆடி வரும் இஷான்கிஷன், கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 2022 மற்றும் 2023ம் ஆண்டு வரை இந்திய அணியில் வாய்ப்பு பெற்று வந்த இஷான்கிஷனுக்கு கடந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் அணியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டது. 

அசத்தல் பேட்டிங்:

பின்னர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம்பிடித்த இஷான்கிஷன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக ஆடி தனது கம்பேக்கின் அவசியத்தை உணர்த்தினார். தற்போது டி20 உலகக்கோப்பையில் அபிஷேக் சர்மா மீது பலரும் எதிர்பார்ப்புடன் இருக்க, அவர் 2 போட்டிகளில் ஆடி 2 போட்டியிலும் டக் அவுட்டானார். ஆனால், இந்திய அணியின் துருப்புச்சீட்டாக இஷான்கிஷன் உருவெடுத்துள்ளார். 

இஷான் கிஷான் இதுவரை இந்திய அணிக்காக மொத்தமாக 39 டி20 போட்டிகளில் ஆடி 1169 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1 சதம், 9 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்துள்ளார். 

இதில், 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை அதாவது அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பு வரை 32 டி20 போட்டிகளில் ஆடி 796 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 6 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 89 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் 6 அரைசதங்கள் அடங்கும்.

கம்பேக்னா இதுதான் கம்பேக்:

அணியில் இருந்து 2 ஆண்டுகள் ஓரங்கட்டப்பட்ட நிலையில், இந்தாண்டு மீண்டும் அணிக்கு திரும்பினார். அணிக்கு திரும்பிய அவர் இதுவரை 7 டி20 போட்டிகளில் ஆடி 373 ரன்களை எடுத்துள்ளார். அதில் 1 சதங்கள் 3 அரைசதங்கள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 215.60 ஆகும். சராசரி 53.28 ஆகும். 

நடப்பு டி20 உலகக்கோப்பையில் இதுவரை 3 போட்டிகளில் ஆடி 158 ரன்களை எடுத்துள்ளார். அதில் 2 அரைசதங்கள் அடங்கும்.  ஸ்ட்ரைக் ரேட் 197.50 ஆகும். 52.66 சராசரியாக வைத்துள்ளார். தனது கம்பேக்கில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் இஷான்கிஷன் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ளார். 

இஷான் 2.0:

இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் எஞ்சிய போட்டிகளில் இஷான்கிஷனின் பேட்டிங் இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, அபிஷேக் சர்மா ரன்கள் எடுக்க திணறிய நிலையில் அலட்சியமாக சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி ரன்களை இஷான்கிஷன் குவித்தார். இஷான்கிஷனின் இந்த செயல்பாடு இஷான் 2.0 என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
Arshdeep Singh: மிட்செலிடம் அத்துமீறிய அர்ஷ்தீப்.. மன்னிப்பு கேட்டும் செஞ்சுவிட்ட ஐசிசி! முழு விவரம்
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு பிசிசிஐ-யின் பிரம்மாண்ட பரிசு! எவ்வளவு தெரியுமா?
Sanju Samson:
Sanju Samson: "இது ஒரு கனவு!" வலிகளே எனது பலம்.. உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் சஞ்சு சாம்சன் உருக்கம்
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
பும்ரா மட்டும் போதுமா? பந்துவீச்சில் பலம்பெறுமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
எங்களுக்கும் கூடுதல் தொகுதி தாங்க.. திமுகவை கதற விடும் கூட்டணி கட்சிகள்.! நடப்பது என்ன.?
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
SC Euthanasia: கொன்னுடுங்க.. படுக்கையில் 13 வருட போராட்டம் - உச்சநீதிமன்றத்தின் கருணைக் கொலை தீர்ப்பு
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
iPhone 16 Huge Discount: ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
ஐபோன் 16 வாங்க காத்திருந்தவங்க முந்துங்க.! ரூ.19,000 தள்ளுபடி.! எங்க, எப்படி வாங்குறது.? பாருங்க
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Embed widget