மேலும் அறிய

ஒரே போட்டியில் 4 சாதனைகள்...ஷ்ரேயாஸ் ஐயருக்கு குவியும் பாராட்டுகள்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான டி-20 போட்டியில் இந்திய அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம் அடித்து அசத்தினார்.

இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 4 முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். 

முதல் சதம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 172 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி வெறும் 14.4 ஓவர்களில் எட்டியது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடி சதம் தான். ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யர் வெறும் 43 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி-20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்தார். 

முக்கிய சாதனைகள்

அதிரடி சதமடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த ஷ்ரேயாஸ் ஐயர், டி-20 போட்டிகளில் சேஸிங்கின் போது அதிகப்பட்ச ரன்களை பதிவு செய்த இந்திய வீரர் என்ற கே.எல்.ராகுலின் (101 ரன்கள்) சாதனையை முறியடித்தார்.

அதேபோல், மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேக சதத்தை பூர்த்தி செய்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். 

மேலும், கேப்டனாக சர்வதேச டி-20 போட்டிகளில் சதம் விளாசிய 3-வது இந்தியர் என்ற பெருமையை அவர் அடைந்தார். அதன்படி, ரோகித் சர்மா, சூர்யகுமார் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்தார். 

முதல்முறை

சர்வதேச டி-20 போட்டிகளில் இலக்கை துரத்திய போது சதம் விளாசிய முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்புமிக்க சாதனையையும் ஷ்ரேயாஸ் ஐயர் தன்வசப்படுத்தினார். இவ்வாறு ஒரே போட்டியில் 4 முக்கிய சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். 

ஆசிய கோப்பை வெற்றி

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தியா முன்னிலை

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டி-20 போட்டி வருகிற 9ஆம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது. முன்னதாக, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றிருந்தது.

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs NZ: பந்து வீச்சில் மிரட்டிய ஜேக்கப் டஃபி.. அடுத்தடுத்து வெளியேறிய வீரர்கள்.. விராட் கோலி அரைசதத்தால் இந்தியா வெற்றி!
IND vs NZ: பந்து வீச்சில் மிரட்டிய ஜேக்கப் டஃபி.. அடுத்தடுத்து வெளியேறிய வீரர்கள்.. விராட் கோலி அரைசதத்தால் இந்தியா வெற்றி!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்! 34 ஆயிரம் டிக்கெட்டிற்கு விண்ணப்பித்த 84 லட்சம் ரசிகர்கள்! மரண வெயிட்டிங் மாமே!
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட்! 34 ஆயிரம் டிக்கெட்டிற்கு விண்ணப்பித்த 84 லட்சம் ரசிகர்கள்! மரண வெயிட்டிங் மாமே!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
“இளைய தலைமுறையை சீரழிக்காதீங்கடா” அதிகாலை காட்சி தேவையா? - சீமான் ஆவேசம்
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
இனி மார்கெட்டுக்கு போக வேண்டாம்! ரூ.100-க்கு 10 வகை காய்கறிகள் வாங்கலாம்! - சிறப்பு திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
Ramayana Review : 2000 கோடி தப்பிக்குமா? ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கு..விமர்சனம் இதோ
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
இந்தியாவின் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி இறக்குமதிக்கு சிக்கல்? - ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் ஸ்ட்ரிக்ட்!
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
மணிப்பூரில் ஓயாத வன்முறை! குறையாத பதற்றம்! - துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
Jailer 2 OTT: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Jailer 2 OTT: ஜெயிலர் 2 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்! இவ்வளவு வீக்கான முதல்வரை தமிழகம் பார்த்தது இல்லை! அட்டாக் மோடில் ஸ்டாலின்
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
TNPSC Group-4: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. குரூப் 4 தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு.. எப்போது வரை?
Embed widget