ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த தொடருக்காக கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணியின் புதிய படையை பிசிசிஐ உருவாக்கியிருந்தது. ஐபிஎலில் கலக்கியவர்கள் இதில் இடம்பெற்றிருந்தனர். சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்றது என்ற சாதனையை படைக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
கே.எல்.ராகுல் காயம்
இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு பயிற்சியின் போது திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் டி20 தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொடை பகுதியில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதே போல குல்தீப் யாதவும் காயம் காரணமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயமாறியாத இளம் படை
இந்திய இளம்படை குறித்து பேசிய அவர், "நாங்கள் ஏற்கனவே இந்தியாவோடு சமீபத்தில் விளையாடி இருந்தாலும், இந்த இந்திய அணி, ஒரு வித்யாசமான அணி. இளம் வீரர்களின் படை இது. இந்த படையை வெல்வது அவ்வளவு எளிது அல்ல, ஏனெனில் புதியவர்கள் அவர்களது இடத்தை இந்திய அணியில் உறுதியாக்குவதற்கான முயற்சியில் அவர்களது முழு பங்களிப்பையும் வழங்குவர். அதுவே அவர்களுக்கு போதுமான உத்வேகத்தை வழங்கும்." என்று கூறினார்.
பியர் குடிக்காதீர்கள்
டெல்லி வெயில் குறித்து பேசிய அவர், "நாங்கள் டெல்லி சூடாக இருக்கும், வெயில் அதிகமாகி இருக்கும் என்று நினைத்தோம், ஆனால் இவ்வளவு அதிகமாக இருக்குமென்று நினைக்க வில்லை. நல்ல வேளை நாங்கள் விளையாடும் போட்டிகள் அனைத்தும் இரவில் நடக்கிறது. இல்லையென்றால் இன்னும் மோசமாக இருக்கும். நம் வீரர்கள் தங்களை எப்போதும் புத்துணர்ச்சி உடன் வைத்துக்கொள்ள வேண்டும். பகலில் வழக்கமாக குடிப்பது போல பியர் குடிக்காமல் அதற்கு பதிலாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் சோர்ந்து போகாமல் இருக்க முடியும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்