IND vs PAK T20 WC 2026: டாஸில் வென்ற பாகிஸ்தான்.. மேட்ச்சில் வெல்லுமா? இமாலய ஸ்கோரை நிர்ணயிக்குமா இந்தியா?
IND vs PAK T20 WC 2026: கொழும்புவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. கொழும்புவில் நடைப்பெறும் இந்தப்போட்டியில் கேப்டன் சல்மான் அலி ஆகா தங்கள் அணியில் மாற்றமில்லை என்றார், இந்திய தரப்பில் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அபிஷேக் சர்மாவும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக குல்தீப் களமிறங்குகின்றனர்.
டாஸ் வென்ற பாகிஸ்தான்
பெரும் எதிர்ப்பார்ப்புகள் மத்தியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தொடங்கவுள்ளது. ஆரம்பத்தில் வங்கதேச அணிக்கு ஆதரவாக இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என்றனர். பின்னர் ஐசிசி கொடுத்த நெருக்கடிக்கு பின்னர் இந்திய அணியுடன் விளையாட சம்மதம் தெரிவித்தது.
கொழும்புவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் பிளேயிங் 11:
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா
பாகிஸ்தான் அணியின் பிளேயிங் 11:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், சல்மான் ஆகா (கேப்டன்), பாபர் அசாம், முகமது நவாஸ், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), ஷாஹீன் அப்ரிடி, அப்ரார் அகமது மற்றும் உஸ்மான் தாரிக்.
சல்மான் அலி அகா சொன்னது என்ன?
டாஸ் போட்ட பிறகு, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம். பிட்ச் சற்று கடினமாக எனவே முதல் சில ஓவர்களில் பந்து வீச்சாளர்களுக்கு சில உதவி கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், எனவே அதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு பெரிய போட்டி. அது நம் அனைவருக்கும் தெரியும். எங்கள் அணியில் உள்ள அனைவரும் நிதானமாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த போட்டியில் கவனம் செலுத்துகிறோம், இந்த சவாலுக்கு நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்" என்றார்.
சூர்யா என்ன சொன்னார்?
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "(முதலில் பேட்டிங் செய்வதில்) எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பவில்லை. இங்கே முடிவுகளைப் பார்த்தோம், கடந்த இரண்டு போட்டிகளில் நாங்கள் பேட்டிங் செய்து இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம், எனவே எதையும் மாற்ற விரும்பவில்லை" என்றார்.




















