இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், அக்டோபர் 14 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான 2023 உலகக் கோப்பை போட்டியில் இளம் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் களமிறங்க 99 சதவிகிதம் வாய்ப்புள்ளது என கூறினார். 


டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்ட கில், இந்தியாவுக்காக ஒருநாள் உலகக் கோப்பையில் அறிமுகமாகும் முனைப்பில் இந்திய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வதற்கு சென்னைக்கு வந்தது. சென்னைக்கு வந்த அடுத்த நாள் முதலே கில்லின் உடல் நிலையில் மாற்றம் தெரியவே, பரிசோதனை மேற்கொள்ளப்பது. பரிசோதனையில் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது, இதனால் அவர் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்ற இந்தியாவின் முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகளை தவறவிட்டார். இந்திய அணியின் இரண்டாவது தொடக்க ஆட்டக்காரராக இஷான் கிஷன் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் முதல் இரண்டு போட்டிகளில் களமிறங்கினார். முதல் போட்டில் டக்-அவுட் ஆன அவர், இரண்டாவது போட்டியில் 46 ரன்கள் சேர்த்த நிலையில் அவுர் ஆனார். 




டெங்கு காய்ச்சலால் பதிக்கப்பட்டிருந்த கில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை முடிந்து ஆப்கானிஸ்தானுக்கு எதிரான செவ்வாய்கிழமை ஆட்டத்தில் இந்திய அணியுடன் இணைந்து கில் டெல்லிக்கு செல்லவில்லை. மாறாக அவர், அவர் தனது நேரடியாக அகமதாபாத்திற்கு சென்றார்.


கில் மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் மற்றொரு முழு அளவிலான பயிற்சி அமர்வில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது, அதன் பிறகு கில்லை அணியில் சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மாவின் கூற்றுப்படி, நாளை கில் களமிறங்கினால், ஒருநாள் உலகக் கோப்பையில் அவரது முதல் போட்டியாக அமையும். 


கில் அணிக்கு திரும்புவது இந்திய அணிக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை ஏற்கனவே வென்றுள்ள நிலையில், கில் தனது சகநாட்டவரான முகமது சிராஜ் மற்றும் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டேவிட் மலான் ஆகியோரை வீழ்த்தி, இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ஐசிசி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றார்.


இந்தியாவின் ஆசியக் கோப்பை வெற்றி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்காக கில் செப்டம்பர் 2023 இல் மாதத்தின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசியின் சிறந்த வீரர் விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றார்.


கில் 2023 உலகக் கோப்பையில் தனது  ஃபார்மைத் தொடர்ந்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை மிக வேகமாக எடுத்த வீரர் என்ற பெருமையை பெறுவார். வலது கை பேட்டரான இவர் இதுவரை, 35 இன்னிங்ஸ்களில் 1917 ரன்கள் எடுத்துள்ளார், மேலும் ஒருநாள் போட்டிகளில் (40 இன்னிங்ஸ்) அதிவேகமாக 2000 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹஷிம் ஆம்லாவின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. 


இந்நிலையில், கேப்டன் ரோகித் சர்மா நாளை நடக்கவுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டில் கில் களமிறங்க 99 சதவீதம் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.