இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது. பின்னர் பாகிஸ்தான் அணியை 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக்கி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
IND vs PAK T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோத வாய்ப்புள்ள சூழல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IND vs PAK T20 World Cup 2026: ஐசிசி டி20 உலகக் கோப்பையின் நேற்றைய லீக் சுற்று போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தானை ஊதி தள்ளி இந்தியா..!
பல்வேறு குழப்பங்கள் மற்றும் தடைகளுக்கு பிறகு, ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான லீக் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18 ஓவர்களிலேயே வெறும் 114 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஹாட்ரிக் வெற்றியுடன் க்ரூப் ஏ பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மேலும், ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 9 போட்டிகளில், இந்தியா தனது 8வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான் சாத்தியமா?
மறுமுனையில் பாகிஸ்தான் அணி இன்னும் தனது சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இறுதி செய்யவில்லை. தனது இறுதி லீக் சுற்று போட்டியில் நமீபியாவை வீழ்த்தினால், அவர்களது அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகிவிடும். ஒருவேளை தோல்வியுற்றால் பல்வேறு கணக்கீடுகளை ஆராய வேண்டி இருக்கும். இந்திய அணிக்கு எதிராக மோசமாக செயல்பட்டாலும், நமீபியாவை எளிதில் வீழ்த்தி பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், லீக் சுற்றுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் ஒருமுறை மோத வாய்ப்புள்ளதா? என்பதே ரசிகர்களின் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால், இரண்டு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருப்பதால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு வாய்ப்பில்லை. ஆனால், அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் மீண்டும் இரு அணிகளும் பலப்பரிட்சை நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
இந்தியா Vs பாகிஸ்தான் - அரையிறுதி, இறுதிப்போட்டி?
ஐசிசி விதிகளின்படி, சூப்பர் 8 சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடத்தை பிடிக்கும் அணிகள், முதல் அரையிறுதிப்போட்டியில் மோதும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடிக்கும் அணிகள், மற்றொரு அரையிறுதியில் களமிறங்கும். அதன்படி, மேற்படி இடங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள், சூப்பர் 8 சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் இடம்பெற்றால், இரு அணிகளும் நடப்பு உலகக் கோப்பையின் இறுதி வாரத்தில் மீண்டும் மோதக்கூடும். ஒருவேளை அப்படி நடக்காவிட்டால், இறுதிப்போட்டியில் மட்டுமே இந்த அணிகள் மீண்டும் களமாட வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே சூப்பர் 8 சுற்றில் அசத்துவதோடு, தங்களது அரையிறுதிப் போட்டிகளிலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா Vs பாகிஸ்தான் - மீண்டும் எப்போது நடைபெறலாம்?
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியில் மோத வேண்டி இருந்தால், அந்த போட்டி இலங்கையில் நடைபெறும் என ஐசிசி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதன்படி,
- இரு அணிகளும் அரையிறுதியில் மோதினால், அந்த போட்டி மார்ச் 4ம் தேதி நடைபெறும்
- இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதினால், அந்த போட்டி மார்ச் 8ம் தேதி நடைபெறும்
எனவே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி, மீண்டும் நடப்பு உலகக் கோப்பையில் இடம்பெறுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
Frequently Asked Questions
இந்தியா பாகிஸ்தானை எப்படி வென்றது?
இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியதா?
ஆம், பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியின் மூலம் ஹாட்ரிக் வெற்றியுடன் இந்திய அணி குரூப் ஏ-யில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மீண்டும் இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறும்?
இரண்டு அணிகளும் ஒரே பிரிவில் இருப்பதால், சூப்பர் 8 சுற்றில் மீண்டும் மோத வாய்ப்பில்லை. அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் மோதும் வாய்ப்பு உள்ளது.
அரையிறுதி போட்டி எப்போது நடக்கும்?
இரு அணிகளும் அரையிறுதியில் மோதினால், அந்த போட்டி மார்ச் 4 அன்று நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.





















