19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை (அண்டர்-19 உலகக் கோப்பை) நேற்று (ஜனவரி 19) முதல் தென்னாப்பிரிக்காவில் தொடங்கி பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இன்று தனது முதல் உலக கோப்பை போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி, உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையில் இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ப்ளூம்ஃபோன்டைனில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. 


இதையடுத்து, இந்தியா vs வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி எப்போது, ​​எங்கு, எப்படி இந்தப் போட்டியை நேரடியாக காணலாம் என்ற முழு விவரத்தை இங்கே பார்க்கலாம். 


உலகக் கோப்பையின் குரூப் ஸ்டேஜில் இந்திய அணி மொத்தம் மூன்று ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இதை தொடர்ந்து, வருகின்ற 25ம் தேதி அயர்லாந்து அணியையும், 28ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது இந்திய அணி. 


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் 16 அணிகள் தலா 4 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும். இதில், 12 அணிகள் தலா 6 பேர் கொண்ட குழுக்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.


போட்டி எப்போது தொடங்குகிறது..?


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே ஜனவரி 20ஆம் தேதி சனிக்கிழமை அதாவது இன்று, இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும். 


போட்டி எங்கு நடக்கும்?


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.  இது ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. 


டிவியில் நேரலையில் பார்ப்பது எப்படி?


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே நடைபெறும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மூலம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 


லைவ் ஸ்ட்ரீமிங்கில் இலவசமாக பார்ப்பது எப்படி?


இந்தியா மற்றும் வங்கதேச போட்டியின் நேரடி ஒளிபரப்பு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக மொபைல் ஆப்களில் கண்டுகளிக்கலாம். 


போட்டிக்கான இந்திய அணி:


ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், உதய் சஹாரன் (கேப்டன்), பிரியான்ஷு மோலியா, சச்சின் தாஸ், முருகன் அபிஷேக், ஆரவெல்லி அவ்னீஷ் (விக்கெட் கீப்பர்), நமன் திவாரி, ராஜ் லிம்பானி, சௌமி பாண்டே, ஆராத்யா சுக்லா, தனேஷ் கவுடா, தனேஷ் கவுடா, ருத்ரா படேல். , பிரேம் தியோகர், முகமது அமன், அன்ஷ் கோசாய்.


போட்டிக்கான வங்கதேச அணி:


ஆஷிகுர் ரஹ்மான் ஷிப்லி (விக்கெட் கீப்பர்), அடில் பின் சித்திக், ஜிஷான் ஆலம், சவுத்ரி முகமது ரிஸ்வான், அரிஃபுல் இஸ்லாம், அஹ்ரார் அமீன், முகமது ஷிஹாப் ஜேம்ஸ், மஹ்ஃபூசூர் ரஹ்மான் ரப்பி (கேப்டன்), ஷேக் பெவேஸ் ஜிபோன், மொஹமட் ரஃபி உஸ்ஸானத் ரஃபி உஸ்ஸானடி, வஸிஹானா, ., மரூஃப் மிருதா, முகமது இக்பால், ஹுசைன் அம்மோன், அஷ்ரபுஸ்ஸாமான் போரான்னோ.