IND Vs Aus : தொடரை இழந்த இந்தியா.. சிறுசுகளை வைத்து மாஸ் காட்டிய ஆஸி
IND Vs Aus : இறுதியில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், கானோலி பதற்றமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

IND Vs Aus 2nd ODI: இந்தியஅணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் மற்றும் கூப்பர் கானோலி ஆகிய இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி அடைந்தது
265 ரன்கள் இலக்கு:
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீசுவதாக அறிவித்தது, இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில், ரோகித் 73 ரன்களும், ஸ்ரேயாஸ் 61 ரன்களும் மற்றும் அக்சர் படேல் 44 ரன்களும் சேர்த்து அசத்தினர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளையும், பார்லெட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.
ஆஸி நிதான ஆட்டம்:
265 ரன்கள் என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டத்தை கடைப்பிடித்தது, டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பிட்ச்சை கணித்து பொறுமையாக ஆடிய நிலையில் ஆர்ஷ்தீப் சிங் ஓவரில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து மார்ஷ் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், இந்தியா என்றாலே பொளந்துகட்டும் டிராவிஸ் ஹெட்டும் 28 ரன்களுக்கு ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 54/2 நிலையில் தடுமாறியது.
சரிவில் இருந்து மீட்ட ஷார்ட்:
3வது வீரராக களமிறங்கிய மேத்யூ ஷார்ட் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார், அவருக்கு பக்கப்பலமாக ரென்ஷாவும் விளையாட ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் சீரராக சென்றது, ஷார்ட் 23 ரன்களில் இருந்த போது அக்சர் பட்டேல் ஒரு கடினமான கேட்ச்சை கோட்டைவிட்டார்.
இதன் பின் அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் 30 ரன்களில் ஆட்டமிழந்தார், அதன் பின்னர் அனுபவம் வாய்ந்த வீரரான அலெக்ஸ் கேரி 9 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலியா 132/4 என நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.
அலறவிட்ட சிறுசுகள்:
அடுத்ததாக இளம்வீரர் கூப்பர் கனோலி களமிறங்கி அதிரடியாக விளையாட ஆரம்பிக்க ஃபிரேஷர் இந்திய அணி பக்கம் திரும்பியது, மேத்யூ தனது 3வது அரைசதத்தை அடித்து 74 ரன்னுக்கு ஆட்டமிழந்தாலும், ,மிட்சேல் ஒவன் அதிரடியில் போட்டி ஆஸ்திரேலிய பக்கம் திரும்பியது. இளம் வீரர் கானோலியும் சர்வதேச ஒரு நாள் அரங்கில் தனது அரைசதம் அடித்தார். ஓவன் 23 பந்துகளில் 36 ரன்களுக்கு வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடரை வென்ற ஆஸ்திரேலியா:
இறுதியில் சில விக்கெட்டுகள் விழுந்தாலும், கானோலி பதற்றமே இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார், அவர் 53 பந்துகளை சந்தித்து 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர், சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்று முன்னிலை பெற்று வென்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் நடைப்பெற்றவுள்ளது





















