இந்தியா - அயர்லாந்து மோதல்:
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் இரண்டு வெண்கலப்பதக்கத்தை வென்றிருக்கிறது. இதில் இன்று (ஜூலை 30) ஹாக்கி குரூப் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் நேரடியாக மோதின. இதில் இந்திய ஹாக்கி அணி வீரர்கள் ஆட்டம் தொடங்கியதில் இருந்து சிறப்பாக விளையாடியது.
காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி:
அந்தவகையில் ஆட்டம் தொடங்கிய 11 வது நிமிடம் இந்திய அணி பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி தங்களது முதல் கோலை அடித்தது. இந்த கோலை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் அடித்தார். அதே நேரம் அயர்லாந்து வீரர்கள் கோலை அடிக்க முடியாமல் திணறினார்கள். இந்திய அணி சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது.
ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதி ஆகியுள்ளது. அடுத்த போட்டியை இந்திய அணி ஆகஸ்ட் 1 ஆம் தேதி குரூப் பி பிரிவில் உள்ள பெல்ஜியம் அணியை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க:Paris Olympics 2024: ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2வது பதக்கம் - துப்பாக்கிச் சுடுதலில் மனு பாக்கர் ஜோடி அசத்தல்
மேலும் படிக்க:Manu Bhaker:பாரீஸ் ஒலிம்பிக்.. சுதந்திர இந்தியாவில் முதல் முறை! புது சகாப்தம் படைத்த மனு பாக்கர்!