IND Vs AUS 1st ODI Toss: முதல் ஒருநாள் போட்டி; இந்தியா பேட்டிங் - கலக்குவார்களா ரோஹித் ஷர்மா, கோலி - ரசிகர்கள் ஆர்வம்
பெர்த்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்வதால் ரோஹித், கோலியை காண ரசிகர்கள் ஆர்வம்.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ரோஹித், கோலியின் பேட்டிங்களை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறன்றனர். போட்டி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்
இந்திய அணிஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் ரசிகர்கள் மத்தியில் எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்காத நிலையில், இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்க உள்ள நிலையில் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம். ஓடிடி தளத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையிலும் கண்டுகளிக்கலாம். இந்த போட்டியைப் பொறுத்தமட்டில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் களமிறங்குகிறது.
இந்திய அணி
ரோகித் சர்மா, சுப்மன்கில் (கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், நிதிஷ் ரெட்டி, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ்.
ஆஸ்திரேலியா
மிட்செல் மார்ஷ் ( கேப்டன்), ட்ராவிஸ் ஹெட், ஜோஷ் பிலிப் ( விக்கெட் கீப்பர், டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், லபுஷேனே, மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டார்க், பார்ட்லெட், மேத்யூ ஹுனேமேன், ஹேசல்வுட்
ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கமே அதிகளவு உள்ளது. இரு அணிகளும் இதுவரை 158 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் ஆஸ்திரேலியா 84 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா 58 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு எதும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.




















