IND vs ZIM T20 WC LIVE: பேட்டிங், பவுலிங்கில் மிரட்டிய இந்தியா..! தோல்வியுடன் வெளிேயேறிய ஜிம்பாப்வே..!

IND vs ZIM T20 World Cup 2022 LIVE Updates: இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் ஏழுமுறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 5 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

ABP NADU Last Updated: 06 Nov 2022 04:52 PM
71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

ஜிம்பாப்வே அணியை 119 ரன்களில் சுருட்டி இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 

போல்டாக்கிய அஸ்வின்

ரயான் பர்லை தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் போல்டு ஆக்கி ஆட்டமிழக்கச் செய்தார்.

10 ஓவர்கள் முடிவில் 59/5

10 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்துள்ளது.

ஷமிக்கு இரண்டாவது விக்கெட்

முகமது ஷமி வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆனஆர் ஜிம்பாப்வே அணியின் முன்யோங்கா. நடுவரின் முடிவை எதிர்த்து டிஆர்எஸ் கேட்டார். இருப்பினும், மூன்றாவது நடுவர் அவர் ஆட்டமிழந்ததாக அறிவித்தார்.

ஒரு கையில் கேட்ச் பிடித்த ஹார்திக் பாண்டியா

ஜிம்பாப்வே அணியின் கேப்டன் எர்வினின் கேட்சை ஒரு கையில் லாவகமாக பிடித்து ஆட்டமிழக்க செய்தார் ஹார்திக் பாண்டியா. அவர் வீசிய ஓவரில் தான் இந்த விக்கெட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு கையில் கேட்ச் பிடித்த ஹார்திக் பாண்டியா

ஜிம்பாப்வே அணியின் கேப்டன் எர்வினின் கேட்சை ஒரு கையில் லாவகமாக பிடித்து ஆட்டமிழக்க செய்தார் ஹார்திக் பாண்டியா. அவர் வீசிய ஓவரில் தான் இந்த விக்கெட் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமிக்கு 1 விக்கெட்

முகமது ஷமி வீசிய 6 ஓவரின் கடைசி பந்தில் ஜிம்பாப்வே அணியின் சான் வில்லியம்ஸ் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

5 ஓவர்களில் ஜிம்பாப்வே 21/2

ஜிம்பாப்வே அணி 5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் எடுத்துள்ளது.

2 ஓவர்களில் 2 விக்கெட்.. இந்திய பந்துவீச்சில் திணரும் ஜிம்பாப்வே

2 ஓவர்களில் 2 விக்கெட் இழந்து ஜிப்பாப்வே அணி தடுமாறி வருகிறது. இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வருகிறது.

முதல் பந்திலேயே விக்கெட்

187 ரன்கள் டார்கெட்டை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் வெஸ்லி, இந்திய அணியின் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்திலேயே கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

187 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே வெற்றி

அரை சதம் விளாசினார் சூர்யகுமார் யாதவ்-கே.எல்.ராகுல். ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் டார்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாண வேடிக்கை காண்பித்த சூர்ய குமார்

சிக்ஸர் மழை பொழிந்த சூர்ய குமார் யாதவ் அரை சதம் பதிவு செய்தார்.

ஆட்டமிழந்தார் பாண்டியா

கடைசி ஓவரில் ஆட்டமிழந்த ஹார்திக் பாண்டியா. 18 ரன்களில் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார் பாண்டியா.

அதிரடி காட்டும் பாண்டியா-சூர்யகுமார் ஜோடி

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடன் மறுபக்கம் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி வருகிறார்.

இந்திய அணி 15 ஓவர்களில் 107/4

15 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தது.

வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பிய ரிஷப் பந்த்

கே.எல்.ராகுல் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் வந்த வேகத்தில் பெலிவிலியன் திரும்பினார்.  பந்த் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அரை சதம் விளாசி ஆட்டமிழந்த ராகுல்

அரை சதம் விளாசிய கே.எல்.ராகுல், ரஸா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

கோலி 'அவுட்'

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சான் வில்லியம்சன் பந்துவீச்சில் 
ரயானிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். கோலி, 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

கோலி-ராகுல் அதிரடி-அரை சதத்தை நோக்கி ராகுல்

கோலியும் ராகுலும் அதிரடியாக விளையாடி வருகின்றனர். இந்த இணையைப் பிரிக்க ஜிம்பாப்வே பல்வேறு உத்திகளை கையாண்டும் பயனில்லை. வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் அரை சதம் பதிவு செய்தார். இந்த ஆட்டத்திலும் அரை சதம் விளாசுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

IND vs ZIM T20 WC LIVE: பவர் பிளே முடிவில் இந்திய அணி- 46/1

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 6 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ZIM T20 WC LIVE: 15 ரன்களில் வெளியேறிய ரோகித்.. கேப்டனின் விக்கெட் காலி..!

13 பந்துகளில் 15 ரன்கள் அடித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முசரபானி வீசிய 4 வது ஓவரில் மசகட்சாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி : 2 ஓவர் முடிவில் இந்திய அணி 6/0

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது. 

ஜிம்பாப்வே அணி விவரம்:

வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின்(கேப்டன்), ரெஜிஸ் சகாப்வா(விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முனியோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்கராவா, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்ஸிங் முசரபானி

இந்திய அணி விவரம் :

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

IND vs ZIM T20 WC LIVE: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டி : இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய அணிக்கு எதிரான கணிக்கப்பட்ட ஜிம்பாப்வே அணி:

வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, டெண்டாய் லெஸ் சதாரா, முசரபானி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கணிக்கப்பட்ட இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வி.. அரையிறுதிக்குள் இந்தியா!

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்ததால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

டி20 உலகக் கோப்பை : நெதர்லாந்து எதிரான போட்டி.. தென்னாப்பிரிக்கா அணி அதிர்ச்சி தோல்வி!

டி20 உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

Background

IND vs ZIM T20 World Cup 2022 LIVE Updates: டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் 2 சுற்றில் இன்னும் அரையிறுதி சுற்றுக்கு போராடி வருகிறது. அதேபோல் பாகிஸ்தான், வங்காள தேசம், தென்னாப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற போராடுகிறது. 


இன்றைய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும். ஆனால், மெல்போர்னில் இன்று நடைபெறவுள்ள போட்டி மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி போட்டியானது வாஷ் அவுட் செய்யப்பட்டால் இந்தியாவின் நிலைமை என்ன..? 


இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஜாம்பவான் அணிகளுக்கு மழை மிகப் பெரிய வில்லனாக இருந்து வருகிறது. பல முக்கிய போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. மழையால் குரூப் 2 சுற்றில் மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், குரூப் 1 இல், சில முக்கியமான போட்டிகள் கைவிடப்பட்டது. இதனால்தான் ஆஸ்திரேலியா போன்ற நடப்பு சாம்பியன் அணிகளும் வெளியேறியது. 


இந்தியா தற்போது 4 போட்டிகள் விளையாடி  6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா (5 புள்ளிகள்) மற்றும் பாகிஸ்தான் (4 புள்ளிகள்) முறையே 2 மற்றும் 3வது இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வேக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா அணி 5 ஓவர் கூட விளையாடவில்லை என்றால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். அப்படியானால் இந்தியாவின் எண்ணிக்கை 7 ஆக இருக்கும். அரையிறுதிக்கு தகுதிபெறும். 


இதேபோல், இன்றைய மற்ற போட்டிகளில் நெதர்லாந்தை தென்னாப்பிரிக்காவும், வங்காளதேசத்தை பாகிஸ்தான் அணியும் வெற்றி பெற்றாலும் புள்ளி மற்றும் நிகர ரன் ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு தகுதிபெற்று, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறும். 


ஹெட் டூ ஹெட் :


இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இதுவரை டி20 போட்டிகளில் ஏழுமுறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், இந்தியா 5 முறையும், ஜிம்பாப்வே 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. 


கணிக்கப்பட்ட இந்திய அணி:


ரோஹித் சர்மா(கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி


கணிக்கப்பட்ட ஜிம்பாப்வே அணி:


வெஸ்லி மாதேவெரே, கிரெய்க் எர்வின் (கேப்டன்), ரெஜிஸ் சகப்வா (விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, டெண்டாய் லெஸ் சதாரா, முசரபானி

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.