வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 


இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் அதாவது ஜூலை மாதம், வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டியில் விளையாடவுள்ளது. 


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குப் பின்னர் இந்திய அணி ஒரு மாத கால ஓய்வுக்குப் பின்னர், மேற்கிந்திய அணியுடன் மோதவுள்ளது. ஜூலை 12ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த தொடரில் ஒருநாள் மட்டும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அண்இ அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை கிரிக்கெட்டுக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடரவுள்ளார். 


மீண்டும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன்


இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் அண்டர் ரேட்டேட் ப்ளேயராக கூறப்படுபவர் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளிலும் ஐக்பிஎல் தொடரிலும் மிகவும் சிறப்பாக விளையாடும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் தராமல் போனது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். குறிப்பாக கடந்த ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலக்கோப்பை கால்பந்து தொடரில் ரசிகர்கள் பலரும் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேனர்களுடன் போட்டிகளை காணவந்தனர். இதற்கு சரியான பதில் அளிக்க முடியாமல் இந்திய அணி திணறியது என்றே கூற வேண்டும். அதன் பின்னர் நியூசிலாந்து ‘பி’ அணிக்கு எதிராக இந்திய அணியை சஞ்சு சாம்சன் வழிநாடத்தும் தொடரை பிசிசிஐ ஏற்பாடு செய்தது என்றே கூறவேண்டும். இந்நிலையில் தற்போது இந்திய அணியில் இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன் ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது அவரது ரசிகர்களின் ஆவலாக உள்ளது. 


ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்


டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி 


ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல். , முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.