இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டொமினிகாவில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் வெற்றியின் வெற்றிக்கு அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடித்த 171 ரன்கள் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. மேலும், இந்த போட்டியில் இஷான் கிஷன் அறிமுக போட்டியாக அமைந்தது.
இந்தநிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் நிறைய மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணம் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சூசகமாக ஒன்றை தெரிவித்தார். டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு வீரர்களும் அடுத்த டெஸ்டில் அறிமுகமாகலாம் என்றும் கில் மற்றும் உனத்கட் போன்ற வீரர்கள் அமரவைக்கப்படலாம் என்று சொல்லாமல் சொன்னார்.
முதல் டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா, “ முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு நல்ல தொடக்கத்தை பெற்றது முக்கியம். இப்போது இதே வேகத்தை இடண்டாவது டெஸ்ட் போட்டியில் எடுக்க உள்ளேன். சில புதிய வீரர்கள் மற்றும் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாதவர்கள் உள்ளனர். இப்போது அவர்களை களத்தில் இறங்குவது பற்றி யோசிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பதினொன்றில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ருதுராஜ், முகேஷ் குமார் தவிர, இந்தியாவுக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நவ்தீப் சைனிக்கும் அடுத்த டெஸ்டில் வாய்ப்பு கிடைக்கலாம். இது தவிரம் ஆல்-ரவுண்டர் அக்சர் படேலும் விளையாடும் லெவனில் இடம்பெறலாம்.
ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக அக்சர் படேல் மற்றும் சைனி களமிறக்கப்படலாம். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 20ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
கணிக்கப்பட்ட இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், கே.எஸ்.பாரத், இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட்