IND vs SL Asia Cup 2023: கிரிக்கெட் போட்டி பொதுவாகவே பேட்ஸ்மேன் போட்டி என கூறப்படுவதுண்டு. அதாவது போட்டி பெரும்பாலும் பேட்ஸ்மேன்களு சாதகமான விதிகளைக் கொண்டுள்ள போட்டி. இப்படியான இந்த போட்டியினை மிகவும் ரசிக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்பினால், பெரும்பாலான ரசிகர்கள் சொல்வது பேட்ஸ்மேன்களின் பெயராகத்தான் இருக்கும். 


ரசிகர்களின் மனநிலை இப்படி இருக்கிறது, போட்டி விதிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக எல்லாம் ஒரு அணியில் 11பேரையும் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்ய முடியாது. வலுவான அணி என்றால் அந்த அணியில் கட்டாயம் மிகவும் தரமான பந்துவீச்சு அணியை தனக்குள் கொண்டிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளார்களும் சுழற்பந்து வீச்சாளர்களும் சரியான அளவில் எதிரணிக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஏனென்றால் வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் கைகொடுக்கவில்லை என்றால் கட்டாயம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும். 


அப்படியான ஒரு போட்டியைத்தான் ஆசியகோப்பைத் தொடர் எதிர்கொண்டுள்ளது. அதாவது இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிக்கொண்டன. இதில் இந்திய அணி வென்று பேட்டிங் தேர்வு செய்தது. மொத்தம் 49.1 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த இந்திய அணி 213 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த போட்டியில் இந்திய அணி இழந்த 10 விக்கெட்டுகளும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சுக்கு பலியாகியுள்ளது. அதாவது இலங்கை அணியின் துனித் 5 விக்கெட்டுகளும், அசலங்கா 4 விக்கெட்டுகளும், தீக்‌ஷனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். 




அதாவது துனித் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேபோல், அசலங்காவின் பந்து வீச்சில், இஷான் கிஷன், ஜடேஜா, பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர். அதேபோல், தீக்‌ஷனாவிடம் அக்‌ஷர் படேல் 50வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்தார். 


இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டுள்ளது. மேலும், கைப்பற்றப்பட்ட 10 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளார்கள் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதில் 10 ஓவர்கள் வீசிய துனித் ஒரு ஓவர் மெய்டன் செய்து, 40 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். அதேபோல், அசலங்கா 9 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவர் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்துள்ளார். தீக்‌ஷனாவைப் பொறுத்தவரையில் 9.1 ஓவர்கள் பந்து வீசி 41 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 




இதன் மூலம் ஆசிய கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் 10 விக்கெட்டுகளும் சுழற்பந்து வீச்சாளார்களால் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது இதுவே முதல் முறை ஆகும். 1036 ஒருநாள் போட்டிகளில் இந்தியா தனது 10 விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களிடம் இழந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.


இந்த தொடர் தொடங்கும்போது இலங்கை அணியின் முக்கிய்மான பந்துவீச்சாளர்கள் காயம் உள்ளிட்ட சில காரணங்களால் தொடரில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கை அணியின் பந்து வீச்சு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. பலமான இந்திய பேட்டிங் வரிசையை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் துவம்சம் செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 




IND vs SL Asia Cup 2023: இலங்கை ஸ்பின்னில் சுருண்ட இந்தியா: அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள்: 214 ரன்கள்தான் டார்கெட்!