ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இரவு 7:00 மணிக்கு தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ருதுராஜ் களமிறங்கினர். தென்னாப்பிரிக்கா சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜ் வீசிய முதல் ஓவரில் இஷான் கிஷன் 2 பௌண்டரி அடித்து மிரட்டினார். மறுபுறம் ருதுராஜ் சிக்ஸர் அடித்து ரன் எண்ணிக்கையை தொடங்க இந்திய அணி பவர் ப்ளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் அடித்துள்ளது. இஷான் கிஷன் 26 ரன்களுடனும், ருதுராஜ் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அதன்பிறகு, பார்னல் வீசிய 7 வது ஓவரில் அடித்து ஆடிக்கொண்டிருந்த ருதுராஜ் 23 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய பண்ட் மற்றும் பாண்டியா ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கியது. 16 பந்துகளில் 29 ரன்கள் இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 20 வது ஓவர் முதல் பந்தில் அவுட்டானார்.
தொடக்கம் அதிரடியான ஆடும் முனைப்பில் இருந்த பாண்டியா 12 பந்துகளில் 2 பௌண்டரி, 3 சிக்ஸர் அடித்து மிரட்ட, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்து 212 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயம் செய்தது.
211 ரன்கள் குவித்ததன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி குவித்த அதிகப்பட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்