ஐசிசி U19 மகளிர் T20 உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. 


இந்திய அணி: 


நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய  அணி  விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று, இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திவருகின்றனர். பேட்டிங்கில் கொங்காடி த்ரிஷா இந்தியாவின் சிறந்த பேட்டராக இருந்து வருகிறார், சுழற்பந்து வீச்சாளர்கள் பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா மற்றும் வைஷ்ணவி ஷர்மா ஆகியோர் தங்களது பவுலிங் மூலம் எதிரணியினரை மிரட்டி வருகின்றனர். நடப்பு சாம்பியன் இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது. 


இதையும் படிங்க: IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து, இன்று 5வது டி20 போட்டி..!


தென்னாப்பிரிக்க அணி:


மறுப்பக்கம் ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க அணி ஐந்தில் வெற்றி பெற்று, ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


கடந்த ஆண்டு சீனியர் ஆடவர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை நினைவூட்டும் வகையில், இந்தியா U19 மகளிர் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா U19 மகளிர் அணி  மோதும் பரபரப்பான போட்டியாக இருக்கும்.


மைதானம் எப்படி?


கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானம், அரையிறுதியிலும்  பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது, குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சொர்க்கமாக இருந்து வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் மெதுவான பந்துகளை வீசும் போது  பேட்டர்கள் தடுமாறி வருகின்றனர் இதுவரை, சேஸிங் அணிகளே வென்று உள்ளதால், டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்து எதிரணிக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். 


போட்டி தொடங்கும் நேரம் மற்றும் நேரலை விவரங்கள்: 


இந்திய நேரப்படி இப்போட்டி நண்பகல் 12 மணிக்கு தொடங்குகிறது, இப்போட்டியை Disney+Hotstar ஆப்ஸ் மற்றும் இணையதளம் வாயிலாகவும் நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் நேரலையாக ஒளிபரப்ப உள்ளது. 


இதையும் படிங்க:சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; அஸ்வினுக்கு சிறப்பு விருது – கவுரவித்த பிசிசிஐ


இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் பாதை



  • வெஸ்ட் இண்டீசை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

  • மலேசியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

  • 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது

  • வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

  • 150 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது

  • இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது


இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்காவின் பாதை



  • நியூசிலாந்தை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

  • சமோவாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது

  • நைஜீரியாவை 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது (DLS)

  • அயர்லாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது (10 ஓவர் போட்டி)

  • அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்டது (டாஸ் இல்லாமல்)

  • ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது


இந்திய உத்தேச அணி:


ஜி கமலினி (விக்கெட் கீப்பர்), கொங்காடி த்ரிஷா, சானிகா சால்கே, நிக்கி பிரசாத் (கேப்டன்), ஈஸ்வரி அவ்சரே, மிதிலா வினோத், ஆயுஷி சுக்லா, ஜோஷிதா விஜே, ஷப்னம் எம்டி ஷகில், பருணிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா


தென்னாப்பிரிக்கா உத்தேச அணி


ஜெம்மா போத்தா, சிமோன் லோரன்ஸ், ஃபே கோவ்லிங், கெய்லா ரெய்னெக் (கேப்டன்), கராபோ மெசோ (விக்கெட் கீப்பர்), மைக் வான் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, லுயாண்டா நசுசா, ஆஷ்லீ வான் வைக், மோனாலிசா லெகோடி, நதாபிசெங் நினி


கடந்த ஆண்டு ஆண்கல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே போல மகளிர் U19 அணியும் சாதித்து காட்டுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க  வேண்டும்.