IND vs SA: சூப்பர் 8-ல் சூப்பராக தொடங்குமா இந்தியா? முதலில் பேட்டிங் செய்யும் தென் ஆப்பிரிக்கா..
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகளில் நடைப்பெற்று வருகிறது.இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.

டி 20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது, இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
டாஸ் வென்ற தென்னாப்ப்ரிக்கா:
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 போட்டிகளில் நடைப்பெற்று வருகிறது.இந்திய அணி தனது முதல் சூப்பர் 8 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி எய்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
கேப்டன்கள் சொன்னது என்ன?
டாஸ் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், தான் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பியதாகத் தெரிவித்தார். இருப்பினும், முதலில் பந்துவீசுவது சாதகமாக அமைய வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிட்டார்."இரண்டு நாட்களுக்கு முன்பு நாங்கள் இங்கு விளையாடியபோது, முதலில் பந்துவீசும் அணிக்கு ஆடுகளம் ஓரளவிற்கு ஒத்துழைத்தது. அந்தச் சூழலை தற்போது பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு பெரிய ஆட்டம், வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பு" என்று அவர் கூறினார்.
மேலும், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தந்திரோபாய அடிப்படையில் அக்சர் படேல் அணியில் நீடிப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். கடந்த போட்டியில் விளையாடிய அதே 'பிளேயிங் லெவன்' (Playing XI) அணியுடன் இந்தியா களம் இறங்குகிறது.
ஐடன் மார்க்ராம்:
தென்னாப்பிரிக்க கேப்டன் ஐடன் மார்க்ராம் பேசுகையில், ஆடுகளம் மிகவும் வறண்ட நிலையில் இருப்பதால் முதலில் பேட்டிங் செய்வது சரியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.





















